ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

கேமராவை மறந்து பைனலிஸ்ட், வின்னர் யாருனு அப்பட்டமாக கூறிய மைனா.. பதறிப்போன பிக் பாஸ்

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் மூன்று வாரங்களில் நிறைவடைய உள்ளதால், இந்த சீசனின் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்ள சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள நினைக்கின்றனர். அதிலும் விஜய் டிவிக்கு பரிச்சயமான மைனா நந்தினி வீட்டை சுற்றியும் கேமரா இருப்பதை மறந்து இந்த சீசனின் வின்னர் யாருனு என்பதை கூறி பிக் பாஸை பதற வைத்திருக்கிறார்.

இதைக் கேட்ட மணிகண்டன் அதிர்ச்சியில் உறைந்தது மட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வின்னர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த அவருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்து கொண்டிருப்பதாக ரியாக்சன் கொடுக்கிறார். ஆகையால் வெளியில போய் வேற வேலைய பாக்கணும் என்ற பிடிப்பு இல்லாமல் பேசுகிறார்.

Also Read: தன்னால் முடியாததை மகள்களை வைத்து சாதிக்க போகும் சஞ்சீவ்.. ஹீரோயின்களாக மாற துடிக்கும் வைரல் புகைப்படம்

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஸ்கிரிப்டட் நிகழ்ச்சி என பல பிக் பாஸ் போட்டியாளர்கள் தெரிவித்திருப்பதால் நிச்சயம் மைனா நந்தினிக்கு ஏற்கனவே இந்த சீசனின் வின்னரையும் தெரிந்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த வகையில் இப்போது ரசிகர்களுக்கும் அதை வெளிப்படுத்தி விட்டார்.

பிக் பாஸ் சீசன்6  நிகழ்ச்சியில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை விக்ரமன் மற்றும் சிவின் இருவர் தான் பெறப்போகின்றனர். அத்துடன் டாப் 5 ஃபைனல் லிஸ்ட் ஆக விக்ரமன், சிவின், அமுதவாணன், ரக்ஷிதா, கதிர் ஆகியோரும் இடம்பெறப் போகின்றனராம்.

Also Read: நாமினேஷனுக்கு வராமலே எஸ்கேப் ஆகும் போட்டியாளர்.. தொடர்ந்து காப்பாற்றப்படும் காரணம்

ஆகையால் அடுத்தடுத்த வாரங்களில் வீட்டில் மீதி இருக்கும் மணிகண்டன், மைனா நந்தினி மற்றும் அசீம் ஆகியோர்தான் எலிமினேட் ஆகப்போகிறார். பெரும்பாலும் தனலட்சுமி மற்றும் அசீம் இருவரும் தான் இந்த சீசனின் கன்டென்ட் கொடுக்கும் கண்டஸ்டன்ட்டாக இருந்தனர்.

மேலும் மைனா நந்தினி மற்றும் மணிகண்டன் இருவரும் தொடக்கத்தில் இருந்து ஒரு சில பிரச்சனைகளில் ஒருதலைப் பட்சமாக பேசியதால் பிக் பாஸ் ரசிகர்களாலும் விமர்சிக்கப்படுகின்றனர். ஆகையால் இவர்கள் இருவரும் தான் அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகின்றனர்.

Also Read: திட்டம் போட்டு எலிமினேஷனை நடத்தும் விஜய் டிவி.. பிக் பாஸில் போடும் ஓட்டு எல்லாமே வேஸ்ட் தானா?

Trending News