Formula 4, car race in Chennai: சென்னையில் நேற்றும் இன்றும் ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடைபெறுகிறது. இதை தமிழ்நாடு துறை அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து இந்த போட்டிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரம் அளவுக்கு 19 திருப்பங்களை கொண்ட இரவு நேர சர்க்யூட் ரேசிங் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் தான் நடைபெற்று வருகிறது.
இந்த கார் ரேஸை கொடி அசைத்து தொடங்கி வைத்தது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி. இதற்கு ஆரம்பிக்க சில எதிர்ப்புகள் வந்திருந்தாலும் முறைப்படி FIA சான்றிதழ்கள் பெற்ற பின்னரே இதனை ஆரம்பிக்கப்பட்டது. இதனை அடுத்து, அடுத்த கார் ரேசிங் வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது.
200 கோடிக்கு மேல் செலவு செய்து பிரமாண்டமாக நடக்கும் கார் பந்தயம்
இதற்கு இடையில் தற்போது நடந்து வரும் இந்த பந்தயத்திற்கு சுமார் 200 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இந்தியாவிற்கு மற்றும் சென்னைக்கு பெருமை வாய்ந்ததாக இருந்தாலும் இத்தனை கோடி செலவு செய்து விளையாட்டு நடத்துவதற்கு தேவையா என்ற பல கேள்விகளும் எழுந்து வருகிறது.
அந்த வகையில் இதில் இருக்கும் தவறான விஷயங்களையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டி வருகிறார்கள். அதாவது பெருத்த மழை வந்தால் அதிலிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாமல் பல வீடுகளும் அதில் மூழ்கிப் போயி மக்கள் எந்த அளவிற்கு அவதிப்பட்டார்கள் என்பது நன்றாகவே தெரியும். அதற்காக எந்தவித ஏற்பாடுகளையும் முடிக்காமல் இந்த விளையாட்டுக்கு இவ்வளவு கோடி செலவு பண்ணுவது சரியா?
அது மட்டும் இல்லாமல் சென்னையில் இருக்கும் எத்தனையோ கிராமங்களில் உள்ள ரோடு மேடு பள்ளமாக இருக்கிறது. ரோடை சரி செய்யும் விதமாக கடந்த ஒரு மாதமாக ரோடுகள் எல்லாம் தோண்டி போட்டு வேலை பார்த்து வருகிறார்கள். ஆனால் இன்னும் வரை அந்த வேலைகள் எல்லாம் முடியாமல் அரைகுறையாக இருக்கிறது. இன்னும் ஒரு மாதத்தில் மழைக்காலம் ஆரம்பித்து விடும். அதற்காக மழைவடிகால் பணிகள் எதுவும் முடிக்கவில்லை.
ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில் 72 சதவீதம் வரை சாலைகள் எதுவும் சரியாக இல்லை. அதற்குள் விளையாட்டுக்கு மொத்த பணத்தையும் வாரி இறைக்கும் விதமாக 200 கோடிக்கும் மேலாக செலவு செய்து இந்த கார் ரேசிங் தேவையா என்ற கேள்விகள் எழும்பி வருகிறது.
இந்த பணத்தை வைத்து குறைந்தபட்சம் ஐந்து மாவட்டங்களில் உள்ள சாலைகளை சீரமைத்து கொடுத்திருக்கலாம். ஆனால் அதை விட்டுப் போட்டு இந்த பந்தயத்தினால் என்ன பிரயோஜனம் என்று கேள்விகள் எழுந்து வருகிறது.