ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அப்பட்டமா தப்பு பண்ணி மாட்டிக்கிட்ட 4 நடிகைகள்.. விவேக் பெயருக்கு பங்கம் ஏற்படுத்திய காமெடி குயின்

4 Actresses made a mistake: சினிமாவில் இருக்கும் சில நடிகைகள் தங்களுக்கு இருக்கும் பேரும் புகழையும் வைத்து அப்பட்டமாகவே தவறு செய்து, இருந்த நல்ல பெயரை கெடுத்துக்கொண்டு சந்தி சிரிக்கும் நிலைமைக்கு வந்தனர். அப்படிப்பட்ட நான்கு நடிகைகளை பற்றி பார்ப்போம்

ஸ்ரீ ரெட்டி: தெலுங்கு திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ ரெட்டி, ஒரு நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்ததை விட படுக்கையை பகிர அழைத்தார்கள் என ஒவ்வொருவரையும் லிஸ்ட் போட்டு ஆதாரத்துடன் நிரூபித்து வரும் வகையில் தற்போது அனைவராலும் அறியப்பட்டவர். இந்த சமயத்தில் தீவிர லைம்லைட்டில் இருந்த ஸ்ரீ ரெட்டி தெலுங்கு பிரபலங்கள் முதல் தமிழ் நடிகர்களான விஷால், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் ஆகியோர் மீதும் அந்தரங்க குற்றச்சாட்டுகளை வைத்தார். இதற்கு பலரும் மறுப்பு தெரிவித்து பேசினர்.

அதோடு ஹைதராபாத்தில் உள்ள மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன் அலுவலகத்திற்கு முன்பு ஸ்ரீ ரெட்டி தனது மேலாடையை சுழற்றி சாலையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த தகவலை அறிந்த போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றது. அந்த சம்பவத்திற்கு பிறகும் தொடர்ந்து பல பிரபலங்களின் மீது அந்தரங்க குற்றச்சாட்டுகளை வைத்தார். ஆனால் ஒருத்தர் இரண்டு பேரை சொன்னால் நம்பலாம், ஆனா பிரபலங்கள் எல்லோருடைய பெயரையும் இஷ்டத்திற்கு சொல்வதால் இவரது பேச்சை இப்போது யாருமே பொருட்படுத்துவதில்லை.

புவனேஸ்வரி: மாடல் அழகியாக இருந்து, அதன் பின் 90களில் நடிகையாக சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர்தான் நடிகை புவனேஸ்வரி. இவருக்கு விவேக் நிறைய படங்களில் வாய்ப்புகளை வாங்கி கொடுத்தார். அப்படிதான் இவருக்கு விஜய்யின் பிரியமானவளே, பிரபுவின் கந்த கடம்ப கதிர் வேலா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் புவனேஸ்வரி விவேக்கின் பெயரை கெடுக்கும் விதமாக பலான தொழிலுக்கு பாதை மாறி சென்று விட்டார்.

பாய்ஸ் படத்தில் விலைமாதுவாக கிளாமர் தூக்கலாக நடித்தது மட்டுமல்லாமல், சொந்த வீட்டில் பெண்கள் சிலரை வைத்து அந்தரங்க தொழில் செய்ததற்காக கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்வுக்குப் பிறகு அவரால் வெளியில் தலைகாட்டவே முடியவில்லை, சினிமா வாய்ப்பும் கிடைக்காமல் தவிக்கிறார்.

Also Read: கமலுடன் கைகோர்க்காத கோலிவுட்டின் 5 முக்கிய புள்ளிகள்.. கமல் கூப்பிட்டும் நோ சொன்ன மார்க் ஆண்டனி

தவறு செய்து மாட்டிக்கொண்ட நான்கு நடிகைகள் 

ரஞ்சிதா: இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ரஞ்சிதா, 90களில் முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டினார். ஆனால் அவர் நித்யானந்தா உடன் சேர்ந்து இருந்த அந்தரங்க வீடியோவால் வாழ்க்கையையும் சினிமாவையும் இழந்து கைலாசமே கதியாக இருக்கிறார்.

ஸ்வேதா பாசு: பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்வேதா பாசு, அதன் பின் தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்த பின்பு தமிழில் ராரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், சந்தமாமா ஆகிய படங்களில் கிளாமர் தூக்கலாக நடித்து இளசுகளை கதி கலங்க வைத்தார். பின்பு இவருக்கு மார்க்கெட் சரிந்ததும் ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் அப்பட்டமாகவே பலான தொழில்களை செய்ததால் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, அதன் பின் பெண்கள் சீர்திருத்த மையத்தில் சேர்த்தனர். பின் ஆதாரம் எதுவும் இல்லாததால், அவர் நிரபராதி என்று விடுதலை பெற்றார்.

Also Read: விவேக் இந்த 5 நடிகர்களை ஒதுக்க காரணம்.. வடிவேலுவின் சூழ்ச்சியால் சின்ன கலைவாணர் எடுத்த முடிவு

Trending News