சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மழை, வெள்ளத்தால் வீட்டிலேயே முடங்கிய மக்கள்.. இப்ப ஓடிடியில் பார்க்க நல்ல 4 படங்கள்

OTT Movies : தமிழகத்தின் முக்கிய நகரமான சென்னையை இப்போது புரட்டி போட்டு வருகிறது மழை. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு பெரிய நிறுவனங்களும் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படி தனது பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறது.

இவ்வாறு மழை, வெள்ளத்தால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்கள் ஓடிடி தளத்தில் பார்க்க நச்சுனு 4 படங்கள் இப்போது இருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான வாழை படம் அக்டோபர் 11ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது.

ஒரு நல்ல படத்தை பார்க்கும் திருப்தி வாழை படத்தை பார்க்கும் போதே கிடைக்கிறது. மிக விரைவில் வாழை 2 படத்தையும் மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார். விமல் மற்றும் கருணாஸ் ஆகியோர் நடிப்பில் போகுமிடம் வெகு தூரம் இல்லை என்ற படம் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகி இருக்கிறது.

ஓடிடியில் பார்க்க நல்ல நான்கு படங்கள்

சைலண்டாக வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். கண்டிப்பாக ஒரு நல்ல படத்திற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றால் போகும் இடம் தூரம் இல்லை படத்தை பார்க்கலாம். அடுத்ததாக தெருக்கூத்து கலையை பெருமைப்படுத்தும் படி வெளியான படம் ஜமா.

இந்த படத்தில் பாரி இளவழகன், அம்மு அபிராமி, சேத்தன் போன்றோர் நடித்திருந்தனர். இப்போது இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றால் அமேசான் ஓடிடி தளத்தில் கண்டு களிக்கலாம். தெருக்கூத்து செய்பவர்களின் வாழ்வியலை இயல்பாக இயக்குனர் இந்த படத்தில் காட்டி இருக்கிறார்.

சரவணன் இயக்கத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சுருதி பெரியசாமி ஆகியோர் நடிப்பில் உருவான படம் தான் நந்தன். எதார்த்தமான இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம்ங் ஆகி இருக்கிறது. பெரும்பாலானோர் ஓடிடியில் இந்த படத்தை பார்த்து வருகிறார்கள்.

Trending News