வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

கிறிஸ்தவ மதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் 5 பிரபலங்கள்.. மறைமுகமாக மதத்தை திணிக்கும் அட்லி

பொதுவாக சினிமா நட்சத்திரங்களை பொறுத்தவரைக்கும் தங்களின் சாதி மற்றும் மதத்தை எப்போதுமே அடையாளப்படுத்தி கொள்ள மாட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் இவர்கள் இப்படி தங்களை அடையாளப்படுத்தி கொள்ள தொடங்கினால் அவர்களுக்கான ரசிகர்கள் கூட்டம் குறைய தொடங்கும். ஆனால் கோலிவுடை சேர்ந்த சிலர் தற்போது தங்களின் மதங்களை அடையாளப்படுத்த தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த லிஸ்டில் தற்போது முதல் இடத்தில் இருப்பவர் கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லப்படும் தளபதி விஜய் தான். இவர் சமீப காலமாக தன்னுடைய படங்களின் பாடல் காட்சிகளில் சிலுவை அடையாளத்தை தன்னுடைய கழுத்தில் அணிந்து வருகிறார். மேலும் சமீபத்திய வாரிசு பட ஆடியோ வெளியீட்டின் போது தன்னுடைய பெயர் ஜோசப் விஜய் என்பதை பொது மேடையில் சொல்லியிருக்கிறார்.

Also Read: துணிவிற்கு தன் வாயாலே விளம்பரம் செய்த தளபதி.. சத்தமில்லாமல் சந்தோசப்பட்டு வரும் அஜித்

இயக்குனர் பிரபு சாலமன் கிறிஸ்டின் மதத்தை சார்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. தன்னுடைய வித்தியாசமான கதைக்களத்தினால் ரசிகர்களை ஈர்த்த இவர், சமீப காலமாக தன்னுடைய படங்களில் கிருஸ்துவ மதத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இவருடைய இயக்கத்தில் ரிலீசான செம்பி படத்தில் கூட கிருஸ்துவ மதத்தால் மட்டுமே அன்பை வெளிப்படுத்த முடியும் என்று சொல்லியிருக்கிறார்.

இயக்குனர் அட்லீயும் இந்த லிஸ்டில் ஒருவர் தான். இவர் தன்னுடைய படங்களில் பொதுவாக கிறிஸ்தவ முறைப்படி நடக்கும் திருமணங்களை அதிகமாக காட்டுவார். இவரின் முதல் படமான ராஜா ராணியிலும் கிறிஸ்தவ கல்யாணத்தை காட்டியிருப்பார். அதே போல் தான் தன்னுடைய பிகில் திரைப்படத்திலும் கிறிஸ்தவ திருமணத்தை காட்டியிருப்பார்.

Also Read: தளபதி விஜய் விவாகரத்தா? கடுப்பில் லண்டன் சென்ற மனைவி சங்கீதா, வெளிவரப்போகும் அதிர்ச்சி தகவல்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கேரளாவை சேர்ந்த இந்து மதத்தவர். இருந்தாலும் இவருடைய படங்களில் பொதுவாக கிறிஸ்துவ மதத்தை பற்றியே அதிகமாக காட்டுவார். பெரும்பாலும் இவருடைய படங்களின் ஹீரோ அல்லது ஹீரோயின் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவராக இருப்பதாக தான் காட்டுவார். மேலும் இவருடைய படங்களில் சர்ச் சீன்களும் அதிகமாக தான் இருக்கும்.

இயக்குனர் மிஷ்கினின் இயற்பெயர் சண்முக ராஜா. அவர் படித்த ரஷிய கதை ஒன்றின் தாக்கத்தால் தன்னுடைய பெயரை மிஷ்கின் என மாற்றி கொண்டார். அதேபோல் இவர் தன்னுடைய படங்களில் கிறிஸ்துவ மதத்திற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கின்றவர். நிறைய படங்களில் வெளிப்படையாகவே கிறிஸ்துவ அடையாளத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Also Read: செம தில்லாய் காத்திருக்கும் உதயநிதி.. தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் எடுபடாத விஜய்யின் அரசியல் பேச்சு

- Advertisement -spot_img

Trending News