திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவகார்த்திகேயன், தனுஷை பதம் பார்க்க தீபாவளிக்கு களமிறங்கும் விரல் நடிகர்.. பக்கபலமாக நிற்கும் கமல்

தனுஷ் நடிப்பில் தற்போது வெளிவந்த அனைத்து படங்களும் அவருக்கு பெரிய வரவேற்பை ஏற்படுத்தி வெற்றி நாயகனாக வருகிறார். அத்துடன் தெலுங்கிலும் நடித்து அங்கே இவருக்கு என்று தனி ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார். சமீபத்தில் வெளியான வாத்தி திரைப்படம் தமிழில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தெலுங்கு ரசிகர்களை குஷிப்படுத்தியது என்றே சொல்லலாம்.

தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த வருடத்தில் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது. அதே நேரத்தில் இவருடன் போட்டி போட்டு பல விஷயங்களை செய்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது இவருடைய படத்துடன் மோத இருக்கிறார். அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் அயலான் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு இதற்கான படப்பிடிப்பு பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்புடன் வெளிவந்தது.

Also read: சிம்பு ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம்.. ரெண்டு பட வெற்றியால் தனுஷை ஓவர்டெக் செய்த எஸ் டி ஆர்

இது நீண்ட காலமாக இழுவையில் இருந்ததால் இப்படத்தை தனுஷ் படத்தோட போட்டி போட வேண்டும் என்பதற்காக இந்த படமும் தீபாவளிக்கு ரிலீஸ் பண்ண வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். இப்படம் ஏலியன் திரைப்படமாக நகைச்சுவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கடுத்து ஆல் ரவுண்ட் ஹீரோவாக இருக்கும் கார்த்தி இவருடன் போட்டி போடுவதற்காக மூன்றாவது முறையாக களம் இறங்குகிறார்.

கார்த்தி நடித்துக் கொண்டிருக்கும் ஜப்பான் திரைப்படமும் தீபாவளி அன்று திரையரங்கில் வெளியிடப்படுவதற்கு எல்லா வேலைகளும் நடைபெற்று வருகிறது. இதுவரை இவர்களுடைய படங்கள் ஒரே நேரத்தில் வெளியிட்டாலும் இவர்கள் இருவருக்குமே வெற்றி படமாக தான் அது அமைந்திருக்கிறது. அதேபோலவே இப்படமும் இவர்களுக்கு சமமான வெற்றியை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: வளர்த்த இயக்குனரை மிதித்த சிவகார்த்திகேயன்.. வேறு வழியின்றி விஷால் இடம் அடைக்கலம்.!

அடுத்ததாக இவர்கள் அனைவரையும் வச்சு செய்வதற்காக தற்போது வெற்றிகளை பார்த்து வரும் விரல் நடிகர் அதாவது சிம்பு களம் இறங்குகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த மாநாடு மற்றும் பத்து தல இரண்டு படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனால் தற்போது சூட்டோட சூட்டாக நடித்து வெளியிட்டால் வெற்றியை பார்க்கலாம் என்று மும்மரமாக படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார்.

இவருக்கு பக்கபலமாக இருக்கிறார் உலக நாயகன். அதாவது சிம்புவின் படமான STR48 படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் பண்ண வேண்டும் என்பதற்காக படத்தின் வேலைகளை
அவசர அவசரமாக நடைபெற இருக்கிறது. இதற்கு தயாரிப்பாளர் முறையில் என்ன வேண்டுமானாலும் நான் செய்ய இருக்கிறேன் என்று கமல் அவர்களுக்கு சப்போர்ட்டாக இருக்கிறார். அப்படி மட்டும் சிம்புவின் படம் தீபாவளிக்கு வந்தால் மரண மாஸாக இருக்கும்.

அத்துடன் தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன், சிம்பு இவர்களுடைய படங்களில் எது வெற்றியாக அமையும், யாருடைய படம் வசூலில் வெற்றி பெறும் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள். அத்துடன் கிங் ஆப் தி வசூல் எந்த நடிகருக்கு கிடைக்கப் போகிறது என்பது பெரிய சம்பவமாக தீபாவளி அன்று இருக்கப் போகிறது.

Also read: வளர்த்த இயக்குனரை மிதித்த சிவகார்த்திகேயன்.. வேறு வழியின்றி விஷால் இடம் அடைக்கலம்.!

Trending News