குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 4 திரில்லர் படங்கள்.. நடுங்க வைத்த மார்கன்

Vijay Antony : திரில்லர் படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரில்லர் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அவ்வாறு உள்ள நான்கு படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மார்கன் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. சீரியல் கில்லர் என்பதை கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான கதைகளைத்துடன் இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தியேட்டரில் வெளியாகி உள்ள இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

லோகேஷ் அஜல்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் வெளியானது லெவன் படம். இந்த படத்திற்கு திரையரங்கில் வரவேற்பு பெரிய அளவில் கிடைக்காத நிலையில் ஓடிடியில் வெளியானது. அப்போது இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நான்கு திரில்லர் படங்கள்

ஒரே மாதிரியான கொலை அடுத்தடுத்து நடந்து வரும் நிலையில் அந்த வழக்கை விசாரிக்கிறார் நவீன் சந்திரா. அந்தக் கொலைகளுக்கான காரணம் மற்றும் யார் செய்தது என்ற விறுவிறுப்பான கதைகளத்துடன் இந்த படம் சென்றது.

அதர்வா நடிப்பில் வெளியாகி இருந்தது டிஎன்ஏ படம். அதாவது மருத்துவ துறையில் நடக்கும் குழந்தை கடத்தல் மற்றும் மாற்றுதல் ஆகியவற்றை வெளிக்கொண்டுவரும் படமாக எடுக்கப்பட்டது. ரசிகர்களை இந்த படம் வெகுவாக கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து சிபிராஜ் நடிப்பில் டென் ஹவர்ஸ் படம் வெளியாகி இருந்தது. 10 மணி நேரத்தில் தொடர்ந்து பல கொலைகள் நடந்து வரும் நிலையில் அதற்கான காரணம் என்ன என்பது தான் இந்த படத்தின் பின்னணி. இதில் சிபிராஜ் போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்து இருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →