வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

சொல் பேச்சுக் கேட்காத நண்பர்கள்.. அந்த உலகக் கோப்பை வெற்றி பற்றி மனம் திறந்த தோனி


டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி பற்றி ’தல’ தோனி தற்போது மனம் திறந்திருக்கிறார். அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதைப் பார்ப்போம்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடுவார் என தகவல் வெளியாகும் நிலையில் ஒருவேளை தோனி ஓய்வு பெற்றாலும் அந்த அணிக்கு ஆலோசகராக வழிகாட்டுவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தோனி கேப்டனாக இருந்தபோது டெஸ்ட், ஒரு நாள், டி 20 ஆகிய மூன்று தொடர்களில் உலகக் கோப்பை வென்று சாதனை படைத்தது. தோனிக்கு பிறகு அணியை யார் வழி நடத்துவது என்ற கேள்வி எழுந்தபோது, விராட் கோலி அணிக்கு கேப்டன் ஆனார். ஆனால், உலகக் கோப்பையில் தோல்வி அடைந்ததை அடுத்து அப்பொறுப்பில் இருந்து விலகினார்.

17 ஆண்டுகளுக்குப் பின் டி20 உலகக் கோப்பை வென்ற இந்தியா

இதையடுத்து, இந்திய அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் உலக கோப்பையில் இறுதிப் போட்டி தோற்ற நிலையில், கடந்த ஜூன் மாதம் நடந்த டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று சாதனை படைத்தது.

India world cup

இந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தியது இந்தியா. இத்தொடரில் இந்திய அணி வெற்றி பெற பும்ரா, கோலி, ரோஹித் சர்மா, சூர்யகுமார், யாதவ் ஆகியோர் முக்கியமான இருந்தனர்.

இறுதிப் போட்டி பற்றி மனம் திறந்த தோனி

தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை வென்று 17 ஆண்டுகளுக்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றது. இத்தொடரின் இறுதிப் போட்டி பற்றி தோனி கூறியதாவது:

’’டி 20 தொடரின் இறுதிப் போட்டியை நண்பர்களுடன் வீட்டில் அமர்ந்து இப்போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது 2 வது இன்னிங்ஸ் வந்தபோது நண்பர்கள் எழுந்து சென்றுவிட்டனர். மேலும் அப்போட்டியைப் பார்க்காதே, இந்தியாவுக்கு எல்லாம் முடிந்தது என்றனர். ஆனால் நான் போட்டியை முழுவதுமாக பார்த்தேன். அப்போட்டியில் இந்தியா வென்றது. கிரிக்கெட்டை பொருத்தவரை கடைசி பந்து முடியும் வரை போட்டியை பார்க்காமல் எல்லாம் முடிந்தது என கூறுவது தவறு’’ என்று கூறினேன்.

நண்பர்கள் என்னை நம்பவில்லை. நான் கூறியது சரி என்பது போட்டி முடிந்த பின்தான் அவர்களுக்கு தெரிந்து அதை ஒப்புக் கொண்டனர். தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆர்டரில் வலுவில்லை. இந்தியா அப்போட்டியில் ஜெயிக்கும் என நம்பிக்கை இருந்தது’’ என்று தெரிவித்தார். எனவே தோனி களத்தில் இருக்கும் போது மட்டும் அல்ல எப்போதும் கூலானவர் தான் என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News