சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ரம்யா கிருஷ்ணனுக்கு 53 வயசாயிடுச்சா.? தலை சுற்ற வைக்கும் நீலாம்பரியின் சொத்து மதிப்பு

Actress Ramya Krishnan: வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் குறையல. இந்த டயலாக் ரம்யா கிருஷ்ணனுக்கு பக்காவாக பொருந்தும். இன்று தன்னுடைய 53வது பிறந்தநாளை கொண்டாடும் இவர் இளம் நடிகையைப் போல் இன்னும் இளமை குறையாத கம்பீரமான அழகுடன் தான் இருக்கிறார்.

அதுவே அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளையும் தேடி வர செய்து விடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன் இப்போது தெலுங்கு டாப் ஹீரோ மகேஷ்பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடித்து வருகிறார்.

Also read: கவர்ச்சி ஆட்டத்திற்காகவே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய 5 நடிகைகள்.. சமந்தாவுக்கே டஃப் கொடுத்த ரம்யா கிருஷ்ணன்

இப்படி பிசியாக இருக்கும் இவர் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் ஒரு படத்திற்கு 4 முதல் 5 கோடி வரை சம்பளமாக பெறுகிறாராம். அதிலும் பல போல்டானா கதாபாத்திரங்களில் இவர் தான் நடிக்க வேண்டும் என்று வாய்ப்புகளும் வரிசை கட்டி நிற்கின்றது.

ஏற்கனவே நீலாம்பரி மூலம் கெத்து காட்டிய இவர் ராஜமாதாவாக அலறவிட்டார். இப்போதும் கூட இவரை பல சமயங்களில் இந்த பெயர்களை வைத்து தான் அழைத்து வருகிறோம். அந்த வகையில் தற்போது டாப் ஹீரோக்களின் படங்களில் ராஜமாதா தான் முதல் சாய்ஸாக இருக்கிறார்.

Also read: யாருமே நினைத்து கூட பார்க்க முடியாத 5 வித்தியாசமான கதாபாத்திரம்.. ரம்யா கிருஷ்ணனை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது

இப்படி கஷ்டப்பட்டு நடித்து இவர் சேர்த்திருக்கும் சொத்தின் மதிப்பு மட்டுமே 98 கோடியாக இருக்கிறது. அதில் சென்னையில் மட்டுமே இவருக்கு மூன்று முக்கிய பகுதிகளில் ஆடம்பர பங்களா இருக்கிறது. அதேபோன்று ஹைதராபாத்திலும் சொகுசு வீடு இருக்கிறது.

மேலும் விலை உயர்ந்த கார், நிலங்கள் என இவர் பல சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார். மேலும் சின்ன திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் ஒரு எபிசோடுக்கு 10 லட்சம் வரை வாங்குகிறாராம். இப்படி தனக்கென ஒரு இடத்தை பிடித்து மாஸ் காட்டிக்கொண்டிருக்கும் நீலாம்பரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Also read: ரம்யா கிருஷ்ணனுடன் அந்தரங்க காட்சியில் நடித்தது ஜாலிதான்.. பரபரப்பை கிளப்பிய லியோ பட வில்லன்

Trending News