வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

ரம்யா கிருஷ்ணனுடன் அந்தரங்க காட்சியில் நடித்தது ஜாலிதான்.. பரபரப்பை கிளப்பிய லியோ பட வில்லன்

ரம்யா கிருஷ்ணன் கதாநாயகியாக நடித்ததை காட்டிலும் படையப்பா படத்தில் வில்லியாக நடித்ததற்கு பிறகு தான் அவரது மார்க்கெட் உச்சத்தை தொட்டது. ரஜினியையே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு வில்லியாக மிரட்டி இருந்தார். அதன் பிறகு பாகுபலி படம் மேலும் அவருடைய நடிப்புக்கு தீனி போட்ட படமாக அமைந்திருந்தது.

ராஜா மாதா சிவகாமி தேவியாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். இப்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்திருந்தார். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனின் வசீகரமான அழகு எல்லோருக்குமே பிடித்த ஒன்றுதான்.

Also Read: 24 வருடத்திற்கு முன் விட்ட சபதத்தை நிறைவேற்றிய ரம்யா கிருஷ்ணன்.. கல்யாணத்தில் முடிந்த லட்சியம்

இந்த சூழலில் ரம்யா கிருஷ்ணனுடன் படுக்கையறை காட்சியில் நடித்தது ஜாலிதான் என வெளிப்படையாக பேசியிருக்கிறார் லியோ பட வில்லன். லோகேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இதில் லோகேஷின் இன்ஸ்பிரேஷனான நடிகர் தான் மன்சூர் அலிகான்.

இவருடைய கேரக்டரை வைத்து தான் கைதி படத்தை கூட லோகேஷ் எடுத்திருந்தார். எல்லாவற்றையுமே வேடிக்கையாக பேசக்கூடிய மன்சூர் அலிகான் சமீபத்தில் ஏடாகூடமாக பேசி பரபரப்பை கிளப்பி இருக்கிறார். அதாவது நடிகைகளுடன் படுக்கையறை காட்சியில் நடிக்கும் போது அதிக டேக் சென்றால் எனக்கு ஜாலியாக இருக்கும்.

Also Read: ஐட்டம் டான்ஸ் ஆடி பண மழையில் குளித்த 5 நடிகைகள்.. ஹீரோயினை விட அதிகம் லாவிட்டு போன ரம்யா கிருஷ்ணன்

அதுவும் கேப்டன் பிரபாகரன் படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் படுக்கையறை காட்சியில் நடித்தது எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது. அதாவது இந்தப் படத்தில் மன்சூர் அலிகான் ரம்யா கிருஷ்ணனை கட்டாயப்படுத்துவார். அப்போது நான் கர்ப்பிணியாக இருக்கிறேன் என அவர் கெஞ்சி கேட்டப்பின் தான் மன்சூர் அலிகான் அவரை விடுவார்.

அதேபோல் விஜய் பட நடிகை ஒருவருடனும் இதுபோன்று நடித்திருக்கிறேன். பல நடிகைகளுடன் படுக்கையறை காட்சிகள் நிறைய ஜாலி பண்ணியிருக்கிறேன் என மன்சூர் அலிகான் வெளிப்படையாக கூறியிருக்கிறார். என்னதான் இருந்தாலும் பொது ஊடகங்களில் இப்படியா பேசுவது என பலரும் மன்சூர் அலிகானை திட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read: ஜெயிலர் வசூலை விஜய்யால் முறியடிக்க வாய்ப்பு இல்லை.. லியோ படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்

Trending News