சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கொஞ்சம் கொஞ்சமா மாத்திடுவாங்கலோ.. மாமியார் செய்த காரியத்தால் மனம் மாறும் கேப்ரில்லா

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் திடீர் திருமணத்தால் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ முடியாமல் தவிக்கும் காவியா-பார்த்திபன் இருவரது ஜாதகத்தில் இருக்கும் தோஷத்தை நிறைவேற்றுவதற்காக காவியாவை பரிகாரம் செய்ய சொல்கின்றனர்.

இதற்காக நடந்தே பாதயாத்திரையாக முருகன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என ஜோதிடர் ஒருவர் சொன்னதால், அதை குடும்பத்தினர் காவியாவை செய்யச் சொல்கின்றனர். அப்படி செய்தால் பார்த்திபன்-காவியா இருவருடைய வாழ்க்கை சந்தோசமாக மாறும் என்பதால் அதை செய்வதில் தவறு இல்லை என பார்த்திபனின் வீட்டார் கருதுகின்றனர்.

ஆனால் இந்த காலத்தில் இதையெல்லாம் நம்ப முடியாது என காவியா சொன்னதால், அந்த பரிகாரத்தை காவியாவின் மாமியார் செய்கிறார். இதனால் நடந்தே பாதயாத்திரையாக சென்றதால் பாதம் முழுவதும் காயமடைந்த மாமியாருக்கு பிரியா மருந்து போடுகிறார்.

அப்போது பிரியா, ‘எதற்காக உங்களையே வருத்திக்கொண்டு இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்’ என கேட்டபோது, ‘காவியா பார்த்திபனுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதற்கு என்ன வேண்டுமானாலும் நான் செய்யத் தயார். காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக காவியாவிடம் சொல்ல வேண்டாம். அப்படி சொன்னால் காவியா மனம் கஷ்டப்படும்’ என்று மாமியார் பிரியாவிடம் சொல்கிறார்.

இதையெல்லாம் காவியா கேட்டு விடுகிறார். 6 மாதம் மட்டுமே பார்த்திபனுடன் சேர்ந்து வாழ்ந்தபின், விவாகரத்து பெற்று விட வேண்டும் என்ற முடிவில் இருக்கும் காவியாவிற்கு, இவ்வளவு அன்பாக மாமியார் நடந்துகொள்வது அவளுடைய முடிவை மாற்றம் ஏற்பட செய்கிறது.

அத்துடன் பார்த்திபனும் காவியாவை உருகி உருகி காதலிப்பதால், இவ்வளவு பாசமாக இருக்கும் குடும்பத்தை எப்படி விட்டுவிட்டு செல்வது என காவியா கலக்கம் கொள்கிறார். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக உண்மையான பாசத்தை காண்பித்து பார்த்திபனின் குடும்பமே காவியாவாக நடிக்கும் கேப்ரில்லாவின் முடிவை மாற்ற போகிறது.

Trending News