ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கொஞ்சம் ஓவரா தான் போற கேப்ரில்லா.. அதுக்குன்னு நடுரோட்டில் இப்படியா

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் காதலித்த ஜோடிகளை பிரித்து திருமணம் ஆக இருந்த மற்றொரு ஜோடி உடன் மாற்றி மாற்றி திருமணம் செய்து வைத்து விட்டனர். இதனால் ஒரே வீட்டில் காதலனும் இருப்பதால் கணவனுடன் வாழ முடியாமல் கேப்ரில்லாவாக நடிக்கும் காவியா படாதபாடு படுகிறாள்.

ஆகையால் காவியா தன்னுடைய கணவர் பார்த்திபனை விவாகரத்து செய்து கொள்ளவும் முடிவெடுத்து, அந்த விவாகரத்து பத்திரத்தில் பார்த்திபனையும் கையெழுத்துப் போட்டுத் தர வற்புறுத்துகிறாள். பார்த்திபனை துளிகூட தன்னுடைய கணவராக ஏற்றுக் கொள்ள விரும்பாத திவ்யா நாளுக்கு நாள் இந்த சீரியலில் பார்த்திபனை படாதபாடு படுத்துவது ரசிகர்களால் பார்க்க முடியவில்லை.

அதுவும் வரும் வாரத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் கேப்ரில்லா கொஞ்சம் அத்துமீறி நடந்து கொள்வதாக தெரிகிறது. ஏனென்றால் ஆட்டோவிலிருந்து இறங்கும் கேப்ரில்லாவை பார்த்திபன் எதார்த்தமாக கையைப் பிடித்து இழுக்கிறான்.

ஒருவேளை எதிரே ஏதாவது வண்டி கேப்ரில்லாவை மோதுவது போல் வந்திருப்பதால், பார்த்திபன் இப்படி செய்திருக்கலாம். ஆனால் அதைப் புரிந்து கொள்ளாத கேப்ரில்லா ரோடு என்பதைக்கூட பார்க்காமல் பார்த்திபனை கொஞ்சம் கூட அறிவு இல்லாமல், இப்படி நடு ரோட்டில் கையை பிடித்து இருக்கிறீர்கள் என கத்துகிறாள்.

இதை பார்த்திபனின் இரண்டாவது தம்பியும் பார்க்கிறான். இப்படி நடுரோட்டில் தரைகுறைவாக பேசுகிறார்களே என ஒரு பக்கம் அவனும் என்ன செய்வது என தெரியாமல் பேசிக்கொண்டிருந்த செல்போனை நிறுத்திவிட்டு ஆச்சரியத்துடன் பார்க்கிறான்.

இப்படி தொட்டுத் தாலி கட்டினவனை கொஞ்சம் கூட மதிக்காமல் இருக்கும் கேப்ரில்லாவை விட்டுவிட்டு பேசாமல் பார்த்திபன், அவனுடைய அத்தை மகளை திருமணம் செய்துகொள்ளலாம் என சோசியல் மீடியாவை சீரியல் ரசிகர்கள் கேப்ரில்லாவை கண்டபடி கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

Trending News