சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஈரமான ரோஜாவே – மனைவிக்காக தீக்குளித்த பார்த்திபன்.. நன்றி கெட்டு கேப்ரில்லா(காவியா)

விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கலெக்டராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் காவியா அதற்காக பயிற்சி வகுப்பிற்கு சென்ற போது, அங்கு தீ விபத்தில் சிக்கிக் கொண்டார். தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து காவியாவின் கணவர் பார்த்திபனும், தீ விபத்தில் மாட்டிக் கொண்ட காவியாவை பத்திரமாக மீட்டார்.

காவியாவின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாத நிலையில் பார்த்திபன் மட்டும் உயிருக்குப் போராடி கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டார். உடல் முழுவதும் புண்ணான பார்த்திபனுக்கு மனைவி காவியா மருந்து போட்டு விடுகிறார்.

மனைவி மனதார ஏற்றுக் கொள்ளாத பாவப்பட்ட கணவரான பார்த்திபனுக்கு காவியா மருந்து போட்டு விடுவதால் பரவசநிலையை அடைகிறார். இப்படி ஒரு சுகம் கிடைக்கும் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் தீக்குளித்த தயார் என பார்த்திபன் சொல்ல, உடனே கேப்ரில்லா கணவர் பார்த்திபனை பளார் என்று கன்னத்தில் அறை விடுகிறார்.

ஏற்கனவே ஒரு முறை கையில் தெரியாமல் மருதாணி போட்டு விட்டதற்காக கேப்ரில்லா, பார்த்திபனின் கன்னத்தில் அறைந்தது போல் இரண்டாவது முறையாக கணவர் என்ற மரியாதை கூட இல்லாமல், சீரியலில் மறுபடியும் பார்த்திபனை அடித்திருப்பது அவருடைய அடாவடியை குறிக்கிறது.

இரண்டு முறை மட்டும் அல்ல. இனி தொடர்ந்து கேப்ரில்லாவின் கையால் பார்த்திபன் கன்னத்தில் அறை வாங்கிக் கொண்டேதான் இருக்கப் போகிறார். இருப்பினும் பார்த்திபன் செய்யும் ஒவ்வொரு நல்ல விசயத்திற்கும் அவரை கஷ்டப்படுத்தும் காவியாவை சின்னத்திரை ரசிகர்கள் திட்டித் தீர்க்கின்றனர்.

அதையும் பார்த்திபன் சகித்துக் கொள்வதால் அவருக்கு கருணை அடிப்படையில் எக்கச்சக்கமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். முட்டிக்கொண்டு இருக்கும் இவர்கள் இருவரும் கூடிய விரைவில் ரொமான்டிக் காதல் ஜோடியாக இனிவரும் நாட்களில் மாறப் போகின்றனர்.

Trending News