Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஓவரா ஆடுற கேப்ரில்லா.. சமயம் பார்த்து வச்சு செஞ்ச கணவர்!

ஓவரா ஆடுற கேப்ரில்லா.. சமயம் பார்த்து வச்சு செஞ்ச கணவர்!

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே2 சீரியலில் காதலர்களாக இருந்த ஜோடியை பிரித்து, காதலனின் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்ததால் இந்த சீரியலில் காவியா கதாபாத்திரத்தில் நடிக்கும் கேப்ரில்லா தன்னுடைய கணவனை கொஞ்சம் கூட ஏற்று தயாராகவில்லை. இதனால் அவனை […]

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே2 சீரியலில் காதலர்களாக இருந்த ஜோடியை பிரித்து, காதலனின் அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்ததால் இந்த சீரியலில் காவியா கதாபாத்திரத்தில் நடிக்கும் கேப்ரில்லா தன்னுடைய கணவனை கொஞ்சம் கூட ஏற்று தயாராகவில்லை. இதனால் அவனை விட்டு விலக வேண்டுமென விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கும்படி கோவிலில் தற்போது விடாபிடியாக அடம்பிடித்து கேட்கிறாள்.

கணவன் மனைவியாக நாம் இருவரும் ஒரு காலமும் சேர்ந்து வாழ முடியாது. எனக்கு விவாகரத்து தந்து விடுங்கள் என்று காவியா கெஞ்சுகிறாள். இதனால் காவியாவின் கணவர் பார்த்தி அடிக்கடி இதைக் கேட்பதால் அவளை சந்தோசப் படுத்துவதற்காக அந்த பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு கொடுத்து விடுகிறான்.

அதன்பிறகு இந்த சீரியலில் யாரும் எதிர்பாராத அதிரடித் திருப்பம் அரங்கேறும் அளவுக்கு தரமான சம்பவத்தை செய்து பார்த்தி சீரியல் ரசிகர்களை குளிர்வித்தான். அதாவது,’ உனக்கு பிடித்த மாதிரி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்துப் போட்டு கொடுத்து விட்டேன். ஆனால் ஒரு கண்டிஷன், இன்று முதல் ஆறு மாதம் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும்.

அப்பொழுது நம் இருவருக்கும் இடையே நட்போ அல்லது காதலோ ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் இந்த விவாகரத்து பத்திரத்தை நீதிமன்றத்தில் அளித்து நீ விவாகரத்து என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்’ என பார்த்தி காவியாவிற்கு செக் வைக்கிறான்.

இவ்வளவு நாள் கணவன் என்று கூட பார்க்காமல் வெடுக் வெடுக்குன்னு பேசி டார்ச்சல் செய்த காவியா, பார்த்தி சொன்ன கண்டிஷனை கேட்டு ஆடிப் போனாள். இதன்பிறகு நிச்சயம் ஜீவா- பிரியா ஜோடி போன்றே, பார்த்தி-காவியா ஜோடியும் ஒருவரை ஒருவர் புரிந்து திருமண வாழ்வை ஏற்றுக்கொண்டு வாழ தயாராக போகிறார்கள்.

ஆனால் காவியாவை பொருத்தவரை மனதார காதலித்த ஜீவாவை தன்னுடைய அக்கா பிரியாவுக்கு விட்டுக்கொடுக்க நினைத்தாலும், அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும்போது அதைப் பார்க்க முடியாதவளாக மாறுகிறாள். நிச்சயம் காவியா தான் ஜீவா-பிரியா இருவருக்கும் வில்லியாக மாறி இந்த சீரியலின் சுவாரஸ்யத்தைக் கூட்டும் நபராக இனி வரும் நாட்களில் இருக்கப் போகிறாள்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.