செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

அத்தானுடன் இருந்த காதலை போட்டுடைத்த கேப்ரில்லா.. ஆடிப்போய் நிற்கும் மாமி

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் கேப்ரில்லா காதலித்த ஜீவா, கேப்ரில்லாவின் அக்கா ப்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இதனால் காதலர்கள் பிரிந்த நிலையில் ஒரே வீட்டில் தங்களது திருமண வாழ்க்கையை வாழ முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னிலையில் கேப்ரில்லாவின் மாமியாருக்கு எதிர்பாராத விதமாய் கேப்ரில்லாவின் முன்னாள் காதல் விஷயம் தெரிந்துவிட்டது. இதைப்பற்றி கேப்ரில்லாவிடம் கேட்கிறார். உடனே கொஞ்சம் கூட மறைக்காமல் ஆம் என ஒத்துக் கொண்டார்.

தன்னுடைய அக்கா வீட்டுக்காரர் ஆன ஜீவாவை தான் காதலித்ததை மட்டும் சொல்லாமல், அந்தக் காதல் தரும் வலி வேதனையை மாமியாரிடம் அழுதுகொண்டே புலம்புகிறார். காதலை மறைத்து நடை பிணமாகவே வாழ்கிறேன்.

என்னை பார்த்தால் எனக்கே வெறுப்பாக இருக்கிறது. இந்த வாழ்க்கை வாழ்வது கொடுமையாக இருக்கிறது என்று கேப்ரில்லா தன்னுடைய மாமியாரிடம் கூறுவது சீரியல் ரசிகர்களை உருக வைத்திருக்கிறது.

இப்படி கேப்ரில்லா தனது மாமியாரிடம் மனம் திறந்து பேசிய பிறகுதான் எதற்காக பார்த்திபனுடன் சேர்ந்து வாழ தயங்குகிறார் என்பது புரிய வந்திருக்கிறது. இதை கேப்ரில்லாவின் மாமியார் கேட்டபிறகு அதிர்ச்சியில் உறைந்தாலும், ஒரு பெண் என்கின்ற ஸ்தானத்தில் கேப்ரில்லாவின் மனதை புரிந்து கொண்டு அவருக்கு ஆறுதல் அளிக்கிறார்.

மேலும் பார்த்திபனும் கேப்ரில்லா மீது அதிக காதல் கொண்டதால், இனி வரும் நாட்களில் கேப்ரில்லாவை புரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய முன்னாள் காதலை மறந்து திருமண வாழ்க்கையைத் துவங்க மாமியார் உறுதுணையாக இருக்கப் போகிறார்.

Trending News