அனிகா சுரேந்திரன் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்துள்ளார்.

விஸ்வாசம் படத்தில் அஜித் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

மேலும் தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஆகஸ்ட் 22 ல் வெளிவந்த இந்திரா படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

தற்போது மணி நாகராஜ் இயக்கத்தில் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
இவர் Kerala State Film Award, Asianet Film Award, JFW Movie Award போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

அனிகா சுரேந்திரன் தனது இன்ஸ்டாவில் சேலையில் கியூட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.