விஜய்க்கு போட்டியாக கெத்து காட்டிய அனிருத்.. வைரலாகும் இன்ஸ்ட்டாகிராம் போட்டோஸ்!

Anirudh: சமீபத்தில் நடிகர் விஜய் மதுரையில் நடத்திய தமிழக வெற்றி கழக மாநில மாநாட்டில் கூடிய மக்கள் கூட்டம் பற்றி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்போது சினிமாக்காரர்கள் யார் நினைத்தாலும் இப்படி ஒரு கூட்டத்தை கூட்ட முடியும் என்று சொல்பவர்களுக்கு தீனி போடும் அளவுக்கு அனிருத் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.

கூவத்தூரில், கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த இந்தக் கச்சேரி, ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆயிரக்கணக்கானோர் கூடி, கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் வரை ECR சாலை முழுவதும் போக்குவரத்து நின்றுவிட்டது. சினிமா ஸ்டார்களின் விழாவைப் போலவே, ஒரு இசை நிகழ்ச்சிக்கும் இவ்வளவு பெரிய கூட்டம் சேர்வது அரிதான சம்பவம்.

வைரலாகும் இன்ஸ்ட்டாகிராம் போட்டோஸ்!

அனிருத் தன்னுடைய Instagram பக்கத்தில் கச்சேரி கூட்டம் அடர்ந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்தப் படங்களை பார்த்த ரசிகர்கள், “விஜய்க்கு மட்டும் இல்லை, அனிருத் இசைக்கும் இவ்வளவு கூட்டம்” என்று கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். சிலர் நேரடியாகவே, “விஜய் காகத்தான் இப்படி ஒரு கூட்டம் வரும் என்று நினைத்தோம், ஆனா அனிருத் பாடல்களுக்கே கூட்டம் வெள்ளம் பாயுது” என்று கமெண்ட் செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தற்போது அதிகம் பேசப்படும் இசை இயக்குநரும், பிளேபேக் பாடகருமான அனிருத், இளம் ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹீரோவாகவே பார்க்கப்படுகிறார். அவர் இசை நிகழ்ச்சிகள், குறிப்பாக “Hookum” கச்சேரி, இன்றைய தலைமுறையின் ‘யூத் கலாச்சாரத்தின்’ பிரதிநிதியாக மாறியிருக்கிறது.