சொந்த வாழ்க்கையை படமாக்கிட்டாரே ரவி?. ப்ரோ கோட் புரோமோ (ரிவெஞ்ச்) வீடியோ எப்படி இருக்கு?

Bro Code: ‘ சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும், சிரிக்காத நாளில்லையே. புது புது அர்த்தங்கள் படத்தில் வரும் இந்த பாடல் வரி தான் ப்ரோ கோடு படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. ஏற்கனவே ஜெயம் ரவியின் வாழ்க்கை புதுப்புது அர்த்தங்கள் படத்தில் வரும் ரகுமான் மாதிரி தான் ஆகிவிட்டது என சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது தன்னுடைய வாழ்க்கையை சினிமாவாக எடுத்து விட்டாரோ என்ற சந்தேகம் வரும் அளவுக்கு இந்த படத்தின் போமோ இருக்கிறது. ஒரு பார்ட்டியில் மூன்று திருமணமான ஜோடிகள் கலந்து கொள்கிறார்கள்.

ப்ரோ கோட் புரோமோ

முதல் ஜோடி ஷ்ரத்தா ஸ்ரீநாத் – எஸ் ஜே சூர்யா.ஷ்ரத்தா தன்னுடைய கணவருக்கு திருமணம் ஆனதிலிருந்து கோபமே வருவதில்லை என்று சொல்கிறார். அந்த நேரத்தில் மொத்த கோபத்தையும் அடக்கிக்கொண்டு எஸ் ஜே சூர்யா சிரிப்பது அவரை நடிப்பு அரக்கன் என மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறது.

மற்றொரு ஜோடி மாளவிகா மனோஜ் மற்றும் அர்ஜுன் அசோகன். அதாவது பெற்றோர் பார்த்து நிச்சயம் இருக்கும் திருமணம் தான் நன்றாக அமைகிறது. இதோ என் கணவர் என் பேச்சை மட்டும் தான் கேட்டு நடப்பார். நான் அவரை மொத்தமாக மாற்றி விட்டேன். இனி அவருக்கு நாம் தேவைப்பட மாட்டோம் என அவருடைய அப்பா அம்மா சகோதரர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள் என்று பாருங்கள் என்று சொல்வார்.

மூன்றாவது ஜோடி தான் ஐஸ்வர்யா ராஜ் மற்றும் ஜெயம் ரவி. அதாவது தான் போன் பண்ணி ஒருவரின் முடிவதற்குள் கணவர் தன் முன்னாடி வந்து நிற்பார் பாருங்கள் என்று சொல்லி போன் பண்ணுவார் ஐஸ்வர்யா. அடுத்த நொடியே ஜெயம் ரவி அந்த இடத்தில் வந்து நிற்பார்.

அர்ஜுன் அசோகன், எஸ் ஜே சூர்யா, மற்றும் ஜெயம் ரவி மூன்று பேரும் தங்கள் மனைவியை விட்டுவிட்டு தனியாக வந்த பிறகு தங்களுக்கு இருக்கும் மற்றொரு முகத்தை காட்டுவார்கள். இந்த வீடியோ முழுக்க வயிறு குலுங்கி சிரிக்கும் அளவுக்கு காமெடி இருக்கிறது.

திருமணத்தால் ஆண்கள் எந்த அளவு சுயத்தை இழந்து மற்றொரு மனிதனாக நடிக்கிறார்கள் என்பதை இந்த படம் சொல்கிறது. பலரும் ஏது ஜெயம் ரவி தன்னுடைய சொந்த வாழ்க்கையை படமாக்கி விட்டாரே என விமர்சனம் வைத்திருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →