உங்க அப்பா, அம்மா திட்ட மாட்டாங்களா!. அடுத்தடுத்து ஷாக்கான புகைப்படங்களை வெளியிடும் குஷ்புவின் மகள்

ஒரு காலகட்டத்தில் இளசுகளின் ஃபேவரிட் நடிகை ஆக வளம் வந்த குஷ்பூ. இப்போது சின்னத்திரை மற்றும் வெள்ளிதிரையில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் முறைமாமன் படத்தில் நடிக்கும் போது இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு அனந்திகா மற்றும் அவந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் குஷ்புவின் மூத்த மகளான அவந்திகா வெளிநாட்டில் படித்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் அவரும் தனது பங்களிப்பை கொடுக்க உள்ளார் என்பதை சமீபத்தில் குஷ்பூ கூறியிருந்தார்.

இப்போது கடந்த சில நாட்களாக அவந்திகாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குஷ்பூவை போல தாராள கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இப்போது கப்பல் கவிழ்ந்தது போல கன்னத்தில் கை வைத்து சோகமாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

குஷ்பூ போல் பார்ப்பதற்கு அச்சு அசலாக இருக்கும் அவந்திகா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அதிக கவர்ச்சி, கலரிங் செய்த முடி, உடம்பு முழுவதும் டாட்டூ என வேற லெவலில் உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தால் உங்கள் வீட்டில் அம்மா, அப்பா திட்ட மாட்டார்களா ரசிகர்கள் கிண்டலடித்த வருகிறார்கள்.

குஷ்புவின் மகள் அவந்திகா

avantika-kushboo

மேலும் குஷ்புவின் இரண்டாவது மகளும் சினிமாவில் அப்பாவை போல் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். இவ்வாறு குஷ்புவின் குடும்பமே கலைக் குடும்பமாக மாற இருக்கிறது. அதுமட்டுமின்றி அவந்திகா எப்போது சினிமாவில் காலடி எடுத்து வைப்பார் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகிறார்கள்.

குஷ்பூவை போல தாராள கவர்ச்சி காட்டிய அவந்திகா

avantika-cinemapettai
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →