கமல்ஹாசன் மகளான ஸ்ருதிஹாசன், நடிகையாகவும் இசைக்கலைஞராகவும் பன்முகத் திறமையுடன் விளங்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.

2011-ல் ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

தனுஷுடன் ஜோடியாக நடித்த 3 படத்தின் வெற்றிக்குப் பின் முன்னணி நடிகையானார்.

சலார் போன்ற பான்-இந்தியா படங்களில் நடித்ததன் மூலம், தென்னிந்திய சினிமா மட்டுமன்றி, இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

Thug Life இல் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தனது தந்தை கமல் ஹாசனுக்கு “Vinveli Nayaga” பாடலை பாடியுள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த கூலி படத்தில் சத்யராஜ் மகளாக நடித்துள்ளார். மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் படத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாவில் தனது போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.