இன்ஸ்ட்டாக்ராமில் பெரும் பஞ்சாயத்து பண்ணும் இர்ஃபானின் மனைவி.. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய போஸ்ட்!

Irfan: ஒன்னுக்கு ஒன்னு சளைத்ததில்லை என்ற கதையாகி விட்டது யூடியூபர் இர்ஃபான் மற்றும் அவருடைய மனைவி ஆலியா செய்த சம்பவம். சர்ச்சைகளுக்கு எப்போதுமே பெயர் போனவர் இர்ஃபான் முன்பின் யோசிக்காமல் இவர் செய்யும் பல விஷயங்கள் பெரிய சர்ச்சையில் தான் முடியும்.

குழந்தையின் பாலினத்தை முன்பே தெரிவித்தது, பிரசவ அறையில் தொப்புள் கொடியை அறுத்தது என எல்லாமே பயங்கரமான விஷயம் தான். சமீபத்தில் இவருடைய சர்ச்சை வாஸ்து அவருடைய மனைவி ஆலியாவை ஒட்டிக்கொண்டது போல ஆலியா குழந்தை பிறப்புக்குப் பிறகு தன்னை ஒப்பனை கலைஞராக அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இர்ஃபானின் மனைவி

பல விசேஷங்களுக்கு மேக்கப் போடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். இந்த நிலையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று ஆலியாவுக்கு வளர்ந்து வரும் ஒப்பனை கலைஞர் என்ற விருதை கொடுத்திருக்கிறது.

இதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த ஆலியா இதன் பின்னால் மிகப்பெரிய நெகட்டிவிட்டி வரப்போகிறது என்பதை உணரவில்லை. ஏற்கனவே இந்த துறையில் இருக்கும் பலரும் இது போன்ற விருதுகள் திறமையானவர்களுக்கு கொடுப்பதில்லை.

இவர் பிரபலத்தின் மனைவி என்பதால் தான் இந்த விருதை கொடுத்திருக்கிறார்கள் என கமெண்ட் செய்திருந்தார்கள். அப்படி நெகடிவ் கமெண்ட் கொடுத்த சிலரை ஆலியா மற்றும் இர்ஃபான் நேரடியாக அந்த கமெண்டிலேயே திட்டி இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் ஆலியா உங்களுக்கு எல்லாம் வயித்தெரிச்சல் அதான் இப்படி பேசுறீங்க என பதில் அளித்து இருக்கிறார். இன்னொரு பக்கம் இர்ஃபான் எப்படி திறமை இருக்கும் என் மனைவியை இப்படி பேசுவீங்க என களம் இறங்கி இருக்கிறார். கடைசியில் விருது வாங்கிய புகைப்படத்தை பகிர்ந்து குடுமிப்பிடி சண்டை போட்டு இருக்கிறார்கள் இந்த தம்பதிகள்.