Game Changer Movie: இயக்குனர் சங்கர் ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் திரைப்படங்களை இயக்கி வந்தார். இதில் தற்போது இந்தியன் படத்தின் வேலைகள் முடிந்து விட்டன. தொழில்நுட்ப வேலைகளுக்காக படக்குழு அமெரிக்கா சென்றிருக்கிறது. அதே நேரத்தில் சங்கர் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார்.
ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திற்கு முதலில் பெயர் வைக்கப்படாமல் ஆர் சி 15 என அடையாளப்படுத்தப்பட்டது. தற்போது இந்த படத்திற்கு கேம் சேஞ்சர் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா, சமுத்திரகனி, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை இயக்குனர் சங்கர் மிகப்பெரிய பொருட் செலவில் எடுத்து வருகிறார். தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்த வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தில்ராஜு தான் கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் தயாரிக்கிறார். தற்போது தயாரிப்பாளரான இவர் தலையில் துண்டு போடும் அளவுக்கு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் ஒரு வேலையை பார்த்திருக்கிறார்.
தற்போது பான் இந்தியா மூவி, மெகா பட்ஜெட் படம் என ஒவ்வொரு படங்களும் 100 கோடிக்கும், 150 கோடிக்கும் எடுக்கப்பட்டு வருகிறது. சாதாரண இயக்குனர்களே இப்படி செலவழித்து விடும் பொழுது, பிரம்மாண்ட இயக்குனர் ஆன சங்கர் எப்படி அவ்வளவு எளிதாக ஒரு படத்தை சின்ன பட்ஜெட்டில் முடித்து விடுவார்.
Also Read:ஜெயிலர் படம் எல்லாம் சும்மா ட்ரைலர் தான்.. தலைவர்-170 யில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?
ஆனால் ஷங்கர் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு படி மேலாகவே போயிருக்கிறார் அதாவது கேம் சேஞ்சர் படத்தின் பாடல்களுக்கு மட்டுமே 90 கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறதாம். பத்து கோடிக்குள் படமே எடுத்து முடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட பாடல் காட்சிகளுக்காக 90 கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் பாடல் காட்சிகள் வித்தியாசமான தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டால் ரசிகர்கள் அதிகம் விரும்புவார்கள் என தில்ராஜூவிடம் பேசி சங்கர் காரியத்தை சாதித்திருக்கிறார். ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், நண்பன் போன்ற படங்களிலும் சங்கர் இது போன்று பாடல் காட்சிகளில் நிறைய வித்தியாசமான விஷயங்களை முயற்சி செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read:விஜய்யைப் பார்த்து காப்பியடித்த ரஜினி.. வாண்டடாக கண்டன்ட் கொடுத்த சூப்பர் ஸ்டார்