புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரிப்போர்ட்டர் கேட்ட ஒரே கேள்வி.. கொச்சையான வார்த்தைகளில் திட்டி தீர்த்த கங்கை அமரன்

சில நாட்களுக்கு முன் மோடியும், அம்பேத்கரும் என்ற பெயரில் உருவான புத்தகத்திற்கு இசைஞானி இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் அவர் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதற்கு மோடிதான் காரணம் என்றும் இதை பார்த்தால் அம்பேத்கரே பெருமைப்படுவார் என்றும் எழுதியிருந்தார்.

மேலும் அம்பேத்கர் கனவு கண்டது போல் மோடியின் ஆட்சியில் ஒவ்வொரு திட்டங்களும் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் மிகப் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது தவறு என்று பலரும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

இப்போது வரை அந்த விவகாரம் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்நிலையில் இளையராஜாவின் சகோதரரும், பிஜேபி உறுப்பினருமான கங்கை அமரன் அந்தப் பிரச்சினையை இன்னும் பெரிதாக மாற்றி இருக்கிறார். ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் தன்னிடம் கேள்வி கேட்ட நிருபரை பல கொச்சையான தகாத வார்த்தைகளை பேசி இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இளையராஜா விவகாரம் பற்றி கேள்வி கேட்ட அந்த நிருபர் கங்கை அமரன் இடம் அந்த முன்னுரையை நீங்கள்தான் எழுதினீர்களா என்று கேட்டார். கங்கை அமரன் அதற்கான பதில் அளிக்காமல் அவரை ஏய், வாயை மூடு என்று ஒரு ரவுடி போல பேசி இருக்கிறார். கடும் மிரட்டல் தொனியில், அதிகாரமாக அவர் பேசியிருப்பது நெட்டிசன்களை தற்போது கொந்தளிக்க வைத்துள்ளது.

மேலும் அவர் கோபத்தில் அந்த முன்னுரையை நான்தான் எழுதினேன் என்ன பண்ணுவ. அதைப்பற்றி பேசுறவன் எல்லாம் முட்டாள், அறிவு இல்லாத நாய் என்றெல்லாம் மிகவும் தரக்குறைவாக பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிருபர் கங்கை அமரனை எவ்வளவு சமாதானபடுத்த முயன்றும் அவர் கேட்பதாக இல்லை.

அவரை பேச விடாமல் உனக்கு அம்பேத்கரை பற்றி என்ன தெரியும், நீ அந்த முன்னுரையை படித்தாயா என்று மிகவும் ஆக்ரோஷமாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். இதை பார்த்த பலரும் ஒரு பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாதா? வயதில் மூத்த ஒருவர் இப்படி தரக்குறைவாக நடந்து கொள்வது எந்த விதத்தில் நியாயம்.

உங்களுக்குப் பின்னால் கட்சி இருக்கின்ற தைரியத்தில் தான் இப்படி எல்லாம் பேசுகிறீர்களா என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது அவர் பேசியிருக்கும் அந்த வீடியோ சோசியல் மீடியாவில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Trending News