செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கவிஞர் வாலியின் தவறை சுட்டிக்காட்டிய கங்கை அமரன்.. மோதல் முற்றியதால் ஏற்பட்ட விளைவு

ஒருவர் காலத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வது மிகவும் கடினம். ஆனால் கவிஞர் வாலி தன்னை தினமும் புது புது கற்பனைகள் மூலம் மாற்றி அப்போ உள்ள காலகட்டத்தை போல் பாடல்கள் எழுதுவார். வாலி எம் ஜி ஆருக்கு நிறைய பாடல்கள் எழுதியுள்ளார்.

எம்ஜிஆரின் அரசியல் நுழைவிற்க்கு வாலியின் வரிகளும் முக்கிய காரணம். கொடுத்ததெல்லாம் கொடுத்தான், வாங்கய்யா வாத்தியாரய்யா போன்ற பல பாடல்கள் எம் ஜி ஆர், வாலி கூட்டணியில் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் கவிஞர் வாலிக்கு தினமும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் ரசிகர்கள் மூலம் வரும்.

அதில் பல கடிதங்கள் வாலியைப் புகழ்ந்து வந்தாலும் ஒரு சில கடிதங்கள் வாலியை திட்டியும் வரும். அதில் வாலிக்கு அடிக்கடி அமர் சிங் என்ற பெயரில் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில் வாலியின் பாடல்களை திட்டியும், தவறுகளை குறிப்பிடும் எப்போதும் வந்துள்ளது.

அதை படித்த வாலி இவருக்கு என்றாவது ஒருநாள் பதில் கடிதம் எழுத வேண்டும் என நிறைய முறை யோசித்து உள்ளார். இந்நிலையில் இளையராஜா இசையில் வாலி நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். ஒரு விழாவில் வாலி, இளையராஜா மற்றும் அவரது தம்பி இயக்குனர் கங்கை அமரன் ஆகியோரை சந்திக்க நேர்ந்தது.

அப்போது வாலியிடம் கங்கை அமரன் நான்தான் அமர்சிங் என்னும் பெயரில் உங்களுக்கு கடிதம் எழுதினேன் என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு கோபமடைந்த வாலி அதன் பின்பு அவருடன் பழக ஆரம்பித்து நட்பாக மாறினார். அதேபோல் கடைசி வரைக்கும் இவர்கள் இருவரும் நண்பர்களாகவே இருந்தனர்.

கங்கை அமரன் இசையமைத்த வாழ்வே மாயம் படத்தில் வாலி வரிகள் எழுதி இருந்தார். அதேபோல் கங்கை அமரன், வாலி கூட்டணியில் பல பாடல்கள் வெளியாகி இருந்தது. அதுமட்டுமல்லாமல் கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு இயக்கிய படங்களிலும் வாலி பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

Trending News