ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

52 வயது டாப் ஹீரோவுக்கு அம்மாவாக கௌதமி.. பாலகிருஷ்ணா அலப்பறைக்கு இது எவ்வளவோ மேல்

Actress Gautami: எவ்வளவு பெரிய ஹீரோயினாக இருந்தாலும் மார்க்கெட் போய்விட்டது அல்லது திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்கள் என்றால் அவர்களுக்கு வாய்ப்பு எட்டாக்கனியாக மாறிவிடும். அதில் அம்மா, அக்கா போன்ற கேரக்டர்களுக்கு தள்ளப்பட்ட நடிகைகளும் இருக்கிறார்கள்.

அப்படித்தான் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக கொடிகட்டி பறந்த நடிகை கௌதமி தற்போது 52 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இத்தனைக்கும் அந்த நடிகர் கௌதமியை விட இரண்டு வயது தான் குறைவானவர்.

Also read: அழகில் கௌதமியை மிஞ்சிய மகள்.. ஸ்ருதிஹாசனை ஓரம் கட்டி அடுத்து உருவாகும் கதாநாயகி

ஆனாலும் இப்படி ஒரு வாய்ப்பை அவர் ஏற்றுள்ளார். அந்த வகையில் தெலுங்கில் டாப் ஹீரோவாக இருக்கும் பவன் கல்யாணுக்கு தான் இவர் அம்மாவாக நடிக்கிறார். என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என்று தான் இதை பார்த்தால் கேட்கத் தோன்றுகிறது.

இருப்பினும் பாலகிருஷ்ணா செய்த அலப்பறையை வைத்து பார்க்கும் போது இது எவ்வளவோ மேல் தான். எப்படி என்றால் சமீபத்தில் அவருடைய நடிப்பில் வீரசிம்ஹா ரெட்டி வெளிவந்தது பலருக்கும் நினைவிருக்கும். அதில் 63 வயதாகும் அவருக்கு 32 வயதான ஹனி ரோஸ் அம்மாவாக நடித்திருப்பார்.

Also read: கௌதமி கமலுடன் இணைந்து நடித்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. துணிச்சலுடன் சர்வ சாதாரணமாக நடித்த அந்தப் படம்

இதைப் பார்த்த அம்மணியின் ரசிகர்கள் நெஞ்சு வெடிக்காத குறையாக கதறினார்கள். அதை வைத்து பார்க்கும் போது பவன் கல்யாணுக்கு கௌதமி அம்மாவாக நடித்தது பரவாயில்லை என்று தான் தோன்றுகிறது. ஆனாலும் தெலுங்கு ஹீரோக்கள் எதற்கு கனவு நாயகிகளை எல்லாம் அம்மாவாக நடிக்க வைத்து கொடுமைப்படுத்துகிறார்கள் என்று தான் தெரியவில்லை.

அந்த வகையில் தமிழில் வெளியாகி சக்கை போடு போட்ட தெறி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் கௌதமி ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஹரிஷ் ஷங்கர் இயக்கும் இப்படம் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: கௌதமி மகளுக்கு வந்த கொலை மிரட்டல்.. 25 கோடியை ஆட்டையை போட்ட கும்பல்

Trending News