புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ரசிகர்களை ஏமாற்றிய கௌதம்.. துருவ நட்சத்திரம் கனவை தவிடு பொடியாக்கிய ஜோஸ்வா!

Gautham Dhruva Nakshatra’s dream of cheating his fans was crushed by joshua: சோதனை மேல் சோதனை போதுமடா சாமி! என்று வேதனையுடன் இருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா எனக் காவலையும் காதலையும் ஸ்டைலிஷ் ஆக வெளிப்படுத்தி பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த திரில்லர் கதைகளுக்கு பெயர் போன கௌதம் சிறந்த இயக்குனராக தடம் பதித்தவர். சில பொருளாதார சிக்கல்கள் காரணமாக அவரின் பல படங்கள் வெளிவர முடியாமல் வருட கணக்கில் கிடப்பில் உள்ளது.

கடந்த ஆண்டு விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதிய அறிவித்தபோதும் கடைசி நேரத்தில் படத்தை வெளியிட தடை விதித்தது நீதிமன்றம். இந்நிலையில் நான்காண்டுகளுக்கு முன்பு இயக்கிய ஜோஸ்வா இமைப்போல் காக்க படத்தை தற்போது ரிலீஸ் செய்து உள்ளார் கௌதம்.

Also read : Joshua Imai Pol Kaakha Movie Review- 4 வருட தடைகளைத் தாண்டி ஜெயித்தாரா கௌதம் மேனன்.? ஜோஷ்வா இமை போல் காக்க முழு விமர்சனம்

பிக் பாஸ் புகழ் வருண்,ராஹேய் திவ்யதர்ஷினி விசித்ரா மற்றும் கிருஷ்ணா  நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படமே ஜோஸ்வா இமைப்போல் காக்க. கௌதமின் வழக்கமான காதல், ஆக்சன், ட்ராமா தான் என்றாலும்  சண்டை காட்சிகளை சற்று அதிகரித்து காதல் காட்சிகளில் பழக்கம் இல்லாதது போல் சொதப்பி சலிப்பு தட்டி ரசிகர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளார் இயக்குனர். முதல் நாள் எதிர்பார்த்து வந்த  ரசிகர்கள் ஏமாற்றம் அடையவே வசூலும் இறங்கு முகமாகவே அமைந்துள்ளது.

இது GVMமின் படம் தானா என  ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இன்னொரு கோணத்தில் பார்க்கும் போது  பொருளாதாரப் பிரச்சினையால் தரமான கலைஞனும் அவரது கலையும் நலிவடைந்து வருகிறதோ என்று எண்ண வைத்து விடுகிறது கௌதமின் இப்படைப்பு.

கௌதம் இயக்கிய படம் தான் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா. அதை விட மொக்க படமாக அமைந்துள்ளது ஜோஷ்வா. இதனால் கௌதமின் ரசிகர்கள் அனைவரும் ரொம்ப எதிர்பார்த்து நம்ப முடியாத அளவு மொக்கை வாங்கி உள்ளனர். இதுவே இப்படி என்றால் துருவ நட்சத்திரம் எப்படி இருக்குமோ என்று பதற்றம் வேறு!  ஜோஸ்வாவின் மூலம் விட்ட இடத்தை பிடித்து துருவ நட்சத்திரத்தை ரிலீஸ் செய்யலாம் என்று கனவு கண்டிருந்த கௌதமுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

Also read : விடிய விடிய நடந்த பஞ்சாயத்து.. தள்ளிப்போன துருவ நட்சத்திரம் ரிலீஸ்

Trending News