சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பிரபல தயாரிப்பாளரை மோசம் செய்த கௌதம் மேனன்.. வில்லனாக ருசி கண்டதால் வந்த வினை

கோலிவுட்டில் இயக்குனராகவும் நடிகராகவும் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், இப்போது வில்லனாக கலக்கிக் கொண்டிருக்கிறார். முதலில் தன்னுடைய படங்களில் இளைஞர்களுக்கு எப்படி காதலிப்பது என்பதை கற்றுக் கொடுத்த கௌதம் மேனன், இப்போது டெரர் வில்லனாக அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி கொண்டிருக்கிறார்.

அதே சமயம் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டியும் நடத்தப்பட்டது. அதில் படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் கௌதம் மேனனுக்கு 2 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள புல்லட் பைக் ஒன்றை பரிசாக கொடுத்தார்.

Also Read: பகிரங்கமாக கௌதம் மேனனிடம் கோரிக்கை வைத்த இளம் சீரியல் நடிகை.. சிம்புவையும் விட்டு வைக்கல

அதன் பிறகு வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்பதையும், அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை கௌதம் மேனனும், ஜெயமோகனும் தொடங்கி விட்டதாகவும் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அந்த விழாவில் கூறியிருந்தார். அது மட்டுமல்ல முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இரண்டாம் பாகத்தை எடுக்கவும் பான் இந்தியா படமாக வெளியிடவும் உள்ளதாக ஐசரி கணேசன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆனால் இப்போது இருக்கும் நிலைமையை வைத்து பார்க்கும் போது இந்த மனுஷன் டைரக்ஷன் பக்கம் வர மாட்டாரு போல் தெரிகிறது. ஏனென்றால் விடுதலை, பத்து தல போன்ற படத்தில் வில்லனாக மாஸ் காட்டினார். அதனால் அவருக்கு இன்னும் இரண்டு படத்தில் வில்லனாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Also Read: பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்த கௌதம் மேனன்.. காப்பாற்றிவிட்ட விஜய் பட தயாரிப்பாளர்

ஆகையால் நடிப்பதில் தான் இப்போது அதிக ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கிறார். இதனால் ஐசரி கணேசனுக்கு கொடுத்த கமிட்மென்ட் எல்லாம் கோவிந்தா தான். வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்தில் மட்டுமல்ல இன்னொரு படத்தையும் இயக்கிக் கொடுப்பதாகவும் ஐசரி கணேசனிடம் கௌதம் மேனன் வாக்கு கொடுத்திருக்கிறார்.

ஆனால் அந்த வாக்கை எல்லாம் இப்போது காத்தோடு பறக்க விட்டு விட்டார். இவரை மறுபடியும் எப்படி டைரக்ஷனுக்கு கொண்டு வருவது என்று ஐசரி கணேசனும் தலையை பிச்சுக்கிட்டு இருக்காராம். இப்போது கௌதம் மேனன் வில்லனாக ஒரு சில படங்களில் நடித்து ருசி கண்டதால், இப்போது ஐசரி கணேசனுக்கு வினையாக மாறி உள்ளது.

Also Read: 10 வருடங்களுக்குப் பிறகு பாலிவுட் செல்லும் கௌதம் மேனன்.. வாரிசு நடிகருடன் தயாராகும் கூட்டணி

Trending News