சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

காதல் மனைவிக்கு வைத்த சம்பள பாக்கி.. கமலை பிரிய அடுக்கடுக்காக 3 முக்கிய காரணங்களை சொன்ன கெளதமி

உலகநாயகன் கமலஹாசன் இன்று சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருந்தாலும் அவருடைய சொந்த வாழ்க்கை என்பது எப்போதுமே பேசும் பொருளாக தான் இருக்கிறது. அவர் சினிமாவில் வந்த காலத்தில் இருந்தே பல நடிகைகளுடன் காதலில் கிசுகிசுக்கப்பட்டார். மேலும் இதில் ஒரு சில காதலை அவரே கூட பொதுவெளியில் ஒப்பு கொண்டிருக்கிறார். என்னுடன் நடித்த ஒரு சில நடிகைகளை நான் காதலித்து திருமணம் செய்ய ஆசைப்பட்டது உண்டு என்று அவரே கூறியிருக்கிறார்.

முதலில் வாணி கணபதி என்னும் பரதநாட்டிய கலைஞரை காதலித்து திருமணம் செய்த கமலஹாசன் ஒரு சில வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்தார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்த சரிகாவை இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். லிவிங்கில் இருந்த இவர்கள் ஸ்ருதிஹாசன் பிறந்த பின்பு தான் திருமணமே செய்து கொண்டார்கள்.

Also Read:கமல் வித்தியாசமான நடிப்பை காட்டிய ஐந்து படங்கள்.. இன்றுவரை மறக்க முடியாத சப்பாணி

சரிகா உடனான திருமணத்திற்கு பின்பும் அவ்வப்போது நடிகைகள் உடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார் கமலஹாசன். இதனால் சரிகாவும் கமலை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் அவருடன் நம்மவர் மற்றும் தேவர் மகன் போன்ற படங்களில் நடித்த நடிகை கௌதமி விவாகரத்திற்கு பிறகு இந்தியா திரும்பி இருந்தார். அவருக்கு அப்போது புற்றுநோய் பாதிப்பு இருந்தது. அந்த நேரத்தில் கமல் அவருக்கு ஆதரவும், உதவியும் செய்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையில் பாபநாசம் திரைப்படத்தில் இருவரும் இறுதியாக ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அதன் பின்னர் விஸ்வரூபம், தூங்காவனம் போன்ற படங்களின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார் கமலஹாசன். அந்த நேரத்தில்தான் கமலை விட்டு பிரிவதாக கௌதமி மீடியா முன் தெரிவித்தார். இது எல்லோருக்கும் சற்று அதிர்ச்சி தரும் விஷயமாகவே இருந்தது.

Also Read:கவுண்டமணியை வெறுத்து ஒதுக்கிய உலகநாயகன்.. இருவரின் விரிசலுக்கு இதுதான் காரணம்

கௌதமி அளித்த பேட்டி ஒன்றில் அவர் ஏன் கமலஹாசனை விட்டு பிரிந்தார் என்று சொல்லி இருக்கிறார். கமல்ஹாசனுடன் தான் இறுதியாக வாழ்ந்த நாட்களில் சுயமரியாதையை இழந்து தான் வாழ்ந்தேன் என்று மனம் நொந்து சொல்லியிருக்கிறார். மேலும் கௌதமி அதற்கு முந்தைய கமல்ஹாசனின் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்தது அனைவரும் அறிந்த விஷயம்.

அதில் தசாவதாரம், விஸ்வரூபம் போன்ற படங்களுக்கு கமலஹாசன் கொடுக்க வேண்டிய சம்பளத்தை கௌதமிக்கு கொடுக்கவில்லையாம். மேலும் கமலின் நடவடிக்கைகளும் மொத்தமாக மாறிப் போயிருந்ததாம். இதனால் தான் கமல்ஹாசனை விட்டு பிரிந்து விட்டதாக அவருடன் பல வருடங்கள் மனம் ஒத்து வாழ்ந்த கௌதமி சொல்லி இருக்கிறார். அப்போது மீடியாக்கள் இவர்கள் இருவரது பிரிவுக்கு நடிகை பூஜா குமார் தான் காரணம் என்று கூட சொல்லினார்.

Also Read:பிரபல நடிகையின் நிறைவேறாத காதல்.. முன்னாள் காதலியின் ஆசையை நிறைவேற்றிய கமல்!

Trending News