வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நயன்தாரா தனுஷ் பிரச்சனை.. நாட்டுக்கு ரொம்ப முக்கியம்.. காயத்ரி ரகுராம் காட்டம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது, படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டதை அடுத்து 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் மிகவும் பிரம்மாண்டபமாக நடைபெற்ற போதும், இந்த திருமணத்தில் குறிப்பிட்ட சில விஐபிக்களுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

இவர்களின் கல்யாண கேசட்டை கூட ரசிகர்கள் free-யாக பார்த்துவிட கூடாது என்று, Netflix OTT தளத்திற்கு ஒரு பெரிய தொகைக்கு விற்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதில் இருந்து எந்த ஒரு வீடியோவும் வெளியாகவில்லை இதனால் ரசிகர்கள் திருமண வீடியோ எப்போது வரும் என கேட்டு அலுத்துவிட்டனர்.

இதையடுத்து, கடந்த வாரம் நயன்தாரா திருமண வீடியோடிவின் டிரைலர் வெளியானது. அதில், நானும் ரௌடி தான் படத்தின் போட்டோவை பயன்படுத்தியதற்காக 10 கோடி கேட்டு தனுஷ் நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதில் உச்சகட்ட கோவத்திற்கு சென்று விட்டார் நயன்தாரா.

நாட்டுக்கு ரொம்ப முக்கியம்..

பொத்தம் பொதுவாக விமர்சிக்காமல், தனுஷின் கேரியரையே கேவலமாக நயன்தாரா விமர்சித்திருந்தார். “ஆவணப்படத்தை தயார் செய்துவிட்டு NOCக்காக தனுஷின் ஒப்புதலுக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருந்தேன்.ஆனால், அவரிடம் இருந்து எந்தவிதமான ஒப்புதலும் வராததால், பிரச்சனையை தீர்க்க, திருமண வீடியோவில் இருந்து நானும் ரௌடி படத்தின் பாடல்கள், போட்டோக்கள் என அனைத்தையும் நீக்கிவிட்டு, செல்போனில் எடுத்த சில காட்சிகளை மட்டுமே அந்த திருமண வீடியோவில் பதிவிட்டுள்ளோம்.”

“ஆனால் இதை கூட வெளியிடவிடாமல் தொடர்ந்து குடைச்சல் கொடுக்கிறார். உங்களை போல எனக்கு சினிமாவில் எந்த background-உம் இல்லை. நான் தனியாக உழைத்து மேலே வந்தேன். அடுத்தவர் படும் துயரத்தை பார்த்து சந்தோஷப்படும் ஒரு சாடிஸ்ட்”என்று தனுஷை கூறியிருந்தார். இதை தொடர்ந்து யார் பக்கம் நியாயம் என்று தொடர்ந்து, பலர் விவாதித்து வர, இதை பார்த்து காட்டமாக கேள்வி கேட்டுள்ளார், காயத்ரி ரகுராம்.

இந்நிலையில், அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம், மதுரையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் ஒன்றில் பேசும் போது, இன்று நயன் தாரா, தனுஷ் சண்டையை பெரிய செய்தியாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் நமக்கு எது முக்கியம். நயன்தாரா நடிச்சு சம்பாதித்தால் என்ன? இல்லை கல்யாண வீடியோவை வித்து சம்பாதித்தால் என்ன? அவர் தனுஷோடு சண்டைப்போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன?

இதை விட ஆயிரம் பிரச்சனைகள் இங்கு உளள்து. பள்ளி வாசலில் போதைப்பொருள் சகஜமாக கிடைக்கிறது, குழந்தைகள் வைத்து இருக்கும் அனைத்து பெற்றோரின் வயிற்றிலுல் அது புளியை கரைக்கிறது, இதை பற்றி எல்லாம் யாருக்கும் எந்த கவலையும் இல்லை. ஆனால் நயன்தாரா தனுஷ் பிரச்சனையை எதோ வீட்டு பிரச்சனையை போல பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று காட்டமாக பேசியுள்ளார்.

Trending News