வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடுத்த ஹிட்க்கு தயாரான மோட்டார் மோகன்.. பெங்களூர் தக்காளியுடன் படப்பிடிப்பை தொடங்கி விஜய் சேதுபதி

சமீபகாலமாக ஆர்ப்பாட்டமாக படங்கள் வெளியாகி தோல்வி உற்றாலும் சைலன்டாக வந்த சில படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதோடு மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்று தந்தது.

ஏற்கனவே ஜெய் பீம் படத்தில் தனது நடிப்பு திறமையை திறம்பட வெளிப்படுத்திய மணிகண்டன் குட் நைட் படத்தில் மோட்டார் மோகன் என்ற கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்து இருந்தார். மேலும் ரசிகர்களுக்கு சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் படியாக இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அடுத்த ஹிட்க்கு மணிகண்டன் தயாராகி இருக்கிறார்.

Also Read: எதிர்பார்க்காமல் வசூல் வேட்டையாடிய 5 படங்கள்.. விஸ்வரூப வளர்ச்சியில் மிமிக்கிரி மணிகண்டன்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் ஆகியோர் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பிரபு ராம் இயக்கத்தில் மணிகண்டன் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பெங்களூர் தக்காளி போல் இருக்கும் கௌரி ப்ரியா ரெட்டி நடிக்கிறார்.

manikandan-shoot-vijaysethupathy
manikandan-shoot-vijaysethupathy

ஜெய் பீம் படத்தில் லிஜோமோல் ஜோஸ் உடன் மணிகண்டன் ஜோடி சேர்த்து நடித்த நிலையில் அடுத்ததாக குட் நைட் படத்தில் மீதா ரகுநாத் உடன் நடித்திருந்தார். இப்போது கௌரி பிரியாவுடன் நடிக்கிறார் என்ற செய்தியை கேட்டவுடன் ரசிகர்கள் மணிகண்டன் அடுத்தடுத்து அழகான நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் என விமர்சனம் செய்து வருகிறார்கள்.

Also Read: ஒரே இரவில் என்ன வேணாலும் நடக்கலாம்.. ஜெய் பீம் மணிகண்டன்-அதர்வா கூட்டணியில் உருவான மத்தகம் டீசர்

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை விஜய் சேதுபதி தொடங்கி வைத்திருக்கிறார். இப்போது பல படங்களில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி மணிகண்டனுக்காக நேரம் ஒதுக்கி இந்த விழாவில் கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இப்படத்தின் பூஜை அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

vjs-shoot-2
vjs-shoot-2

ஆரம்பத்தில் விஜய் சேதுபதியும் இதுபோன்ற நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த நிலையில் இப்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். அதேபோல் மணிகண்டனின் படங்களும் இப்போது ரசிகர்களை பெறும் அளவில் கவர்ந்த நிலையில் இந்த படமும் நிச்சயம் வெற்றி பெறும் என்று பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Also Read: நல்ல திறமை இருந்தும் வாயால் அழிந்த 5 இளம் நடிகர்கள்.. 2 கோடிக்கு வலை விரிக்கும் ஜெய் பீம் மணிகண்டன்

Trending News