செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சொந்த வாழ்க்கை, சினிமா இரண்டிலுமே சக்கை போடு போட்ட ஜெமினி கணேசன்.. காதல் மன்னன் என்று பெயர் வர இதுதான் காரணம்

சிவாஜி, எம்ஜிஆர் போல அந்த காலகட்டத்தில் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தவர் நடிகர் ஜெமினி கணேசன். இவர் நடிக்க தொடங்கியதில் இருந்து இறக்கும் வரை காதல் இளவரசனாகவே வாழ்ந்தார். இந்நிலையில் ஜெமினி கணேசனுக்கு காதல் மன்னன் என்று பெயர் வர காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

ஜெமினி கணேசன் நடித்த ஆரம்ப படங்களில் அவரது பெயர் ஆர் கணேசன் என்றே இடம்பெற்று இருந்தது. ஆனால் அந்த காலகட்டத்தில் சிவாஜி கணேசனை எல்லோரும் கணேசன் என்றே அழைத்தனர். ஆகையால் ஜெமினி நிறுவனத்திற்கு ஜெமினி கணேசன் நிறைய படங்கள் நடித்து கொடுத்தார்.

Also Read : சூட்டிங் ஸ்பாட்டில் திடீரென கிஸ் அடித்த நடிகர்.. கதறி அழுத ஜெமினி கணேசனின் மகள்

ஆகையால் அவரது பெயர் ஜெமினி கணேசன் என்று அழைக்கப்பட்டது. இந்நிலையில் இவருக்கு நான்கு மனைவிகள். முதலாவதாக அமலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். 1940 இல் இருந்து 2005 வரை இவருடன் ஜெமினி கணேசன் வாழ்ந்தார். இவருக்கு அடுத்தபடியாக இரண்டாவதாக புஷ்பவல்லி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் தன்னுடன் அதிக படங்கள் நடித்த சாவித்திரியை 1952 ல் ஜெமினி கணேசன் திருமணம் செய்தார். கடைசியாக ஜூலியானா ஆண்ட்ரூ என்பவரை 1997இல் திருமணம் செய்து கொண்டு 2005 வரை அவருடன் ஜெமினி கணேசன் வாழ்ந்துள்ளார்.

Also Read : சாம்பார் என ஜெமினிக்கு பெயர் வந்ததன் ரகசியம்.. பல வருட ரகசியத்திற்கு கிடைத்த பதில்

இந்த நால்வரையுமே ஜெமினி கணேசன் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார். சொந்த வாழ்க்கையில் இப்படித்தான் என்றால் சினிமாவிலும் அதிகம் காதல் படங்களில் தான் நடித்து வந்தார். இவ்வாறு தொடர்ந்து காதல் படங்களிலேயே நடித்து வருகிறோம் என சில ஆக்சன் படங்களிலும் நடித்தார்.

ஆனால் அந்த படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆகையால் மீண்டும் காதல் படங்களிலேயே நடித்து வந்தார். ஆகையால் சொந்த வாழ்க்கை, சினிமா இரண்டிலுமே ஜெமினி கணேசனுக்கு காதல் தான் கை கொடுத்ததால் காதல் மன்னன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

Also Read : ஜெமினி மறைத்த அந்த ரகசியம்.. திருமணத்திற்குப் பின் வெளிவந்த உண்மை

Trending News