Ghibli Photos: இப்போது ட்ரெண்டிங்கில் இருப்பது ஜிப்லி புகைப்படங்கள் தான். ஓபன் ஏஐ என்ற நிறுவனத்தின் ChatGPT-யை பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.
நமக்கு தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் இது சில வினாடிகளிலேயே கொடுத்துவிடுகிறது. ஆனால் இப்போது ஒரு மணி நேரத்தில் இதன் பயனாளர்கள் 10 லட்சம் பேராக உயர்ந்திருக்கிறார்கள்.
இதற்கு காரணம் ஜிப்லி புகைப்படங்கள் தான். ஆரம்ப காலத்தில் இருந்தே அனிமேஷன் மீது ரசிகர்களுக்கு ஈடுபாடு அதிகமாக இருந்து வருகிறது.
உலக அளவில் ட்ரெண்டான Ghibli புகைப்படம்
அந்த வகையில் தங்களது புகைப்படங்களையும் அனிமேஷன் ஆக பார்க்கும் வசதி இருந்தால் சும்மாவாக இருப்பார்களா? இஷ்டத்துக்கு எல்லா புகைப்படங்களையும் கிப்லி புகைப்படங்களாக மாற்றி வந்தனர்.
இதனால் ChatGPT திணறிவிட்டது. இந்த நிறுவனம் தங்களது தொழிலாளர்களுக்கு உறக்கம் வேண்டும் அதனால் கொஞ்சம் நிதானமாக இதை பயன்படுத்துங்கள் என்று கோரிக்கையும் வைத்தது.
மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி என பலரும் தங்களது நினைவுகளை ஜிப்லி புகைப்படங்களாக வெளியிட்டு இருந்தனர். மேலும் ஜிப்லி புகைப்படங்கள் உலக அளவில் இப்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.