வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்த கள்ளக்காதலி.. தெறித்து ஓடிய கோபி!

விஜய் டிவியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் விவாகரத்து பெற்ற ராதிகா, தன்னுடன் கல்லூரியில் படித்த காதலனான கோபியை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள நினைக்கிறாள். அதற்காக கோபியையும் பாக்யாவை விட்டு பிரிய வேண்டும் என்று நாசுக்காக காய் நகர்த்தி அவனையும் விவாகரத்து பெற வைக்கிறாள்.

இருப்பினும் கோபிதான் பாக்யாவின் கணவர் என்ற விஷயம் ராதிகாவிற்கு இன்றுவரை தெரியாது. ஆனால் பல சமயங்களில் ராதிகாவிற்கு கோபிதான் பாக்யாவின் கணவர் என்பது தெரியும் சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை கோபி தனக்கு ஏற்றாற்போல் ஈசியாக மாற்றியமைத்து இவ்வளவு நாள் ராதிகாவிடம் இருந்து எஸ்கேப் ஆகி வருகிறான்.

அத்துடன் ராதிகாவிற்கு, பாக்யாவை பற்றி பேசினால் கோபிக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அதை தீர்த்துக் கொள்வதற்காக இருவரையும் சந்திக்க வைக்க ராதிகா முடிவு செய்கிறாள். அதற்காக தன்னுடைய மகள் மயூவின் பிறந்தநாள் விழாவிற்கு ஆஸ்ரமத்தில் மதிய உணவு வழங்க வேண்டும் என்பதற்காக பாக்யாவிடம் சமையல் ஆர்டர் கொடுத்து, அங்கு வரும் பாக்யாவை கோபிக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என ராதிகா சர்ப்ரைஸாக ஏற்பாடு செய்கிறாள்.

ஆனால் முட்டாள் ராதிகா அதை கோபியிடம் சொல்லிவிட்டு, அதை சர்ப்ரைஸ் எனவும் கூறிக் கொள்கிறாள். அந்த நேரத்தில் கோபி அதை மறுத்துப் பேசாமல் ஆசிரமத்திற்கு வந்தால் தானே பாக்யாவை பார்க்க முடியும் .அங்கு போகாமல் ஆபிஸில் ஏதோ ஒரு வேலை இருக்கிறது என காரணத்தைச் சொல்லி இந்த முறையும் பாக்யாவை ராதிகா முன்பு நேருக்கு நேர் பார்த்து சந்திக்காமல் கோபி தன்னுடைய தந்திரமான நாடகத்தை அரங்கேற்ற போகிறான்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல கூடிய விரைவில் கோபி கையும் களவுமாக பாக்யா மற்றும் ராதிகாவிடம் சிக்கிக் கொள்ள தான் போகிறான்.  அப்படி ஒரு நிலை வந்தால் நிச்சயம் பாக்யா கோபியை மன்னித்து ஏற்றுக் கொள்ள மாட்டாள்.

ஆனால் ராதிகா தன்னுடைய இரண்டாவது திருமணத்தையாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பாக்யாவிற்கு இனிவரும் நாட்களில் வில்லியாக மாறி கோபியை தன் பக்கமே வைத்துக் கொள்ள போகிறாள்.

Trending News