வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கவர்ச்சியில் தாராளம் காட்டிய புவனேஸ்வரியின் 5 படங்கள்.. பாய்ஸ் படத்தை பார்த்து ஏங்கிய இளசுகள்

நடிகை புவனேஸ்வரி திரைப்படங்களில் நடித்தது மட்டுமல்லாமல் மாடல் அழகியும் ஆவார். இவர் நடிகைகள் ஷர்மிளா, விசித்ராவுக்கு இணையாக தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் வந்திருந்தாலும் பெரும்பாலான படங்களில் இவர் கவர்ச்சிக்காகவே பயன்படுத்தப்பட்டார்.

தலைநகரம்: இயக்குனர் சுந்தர் சி முதன்முதலாக ஹீரோவாக நடித்த திரைப்படம் தலைநகரம். இந்தப் படம் 2006 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் அடித்தது. முழுக்க முழுக்க ஆக்சன் கதையை மையமாகக் கொண்ட இந்த படத்தில் நடிகை புவனேஸ்வரி, வில்லனாக நடித்த ஜூடோ ரத்தினத்தின் காதலியாக நடித்திருப்பார்.

Also Read: வாய்ப்பு கிடைக்காமல் பலான படங்களில் நடித்த நடிகைகள்.. ஆள் பாதி, ஆடை பாதி என்று போன வாழ்க்கை

என்னவோ பிடிச்சிருக்கு : என்னவோ பிடிச்சிருக்கு திரைப்படம் 2004 ஆம் ஆண்டு இயக்குனர் மீனாட்சி சுந்தரம் இயக்கத்தில் வெளியான திரைப்படம். இந்தப் படம் காதல் திரில்லர் கதையை மைய்யமாக கொண்டது. என்னவோ புடிச்சிருக்கு திரைப்படத்தில் நடிகை புவனேஸ்வரி சரோஜா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

பாய்ஸ்: பாய்ஸ் திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இளைஞர்களை மட்டுமே மைய்யமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் புவனேஸ்வரி ராணி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படம் தான் சினிமாவில் புவனேஸ்வரிக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.

Also Read: பலான தொழில் செய்து சிக்கி சீரழிந்த 5 நடிகைகள்.. சினிமாத்துறைக்கு வந்த கெட்ட பெயர்

கந்தா கடம்பா கதிர்வேலா: இயக்குனர் இராம நாராயணன் இயக்கத்தில் பிரபு, வடிவேலு, விவேக், எஸ் வி சேகர் நடித்த திரைப்படம் கந்தா கடம்பா கதிர்வேலா. இந்த படம் ஜெமினிகணேசன் நடிப்பில் வெளியான பூவா தலையா படத்தின் கதையை மையமாகக் கொண்டது. கந்தா கடம்பா கதிர்வேலா திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலுவின் மனைவியாக புவனேஸ்வரி நடித்திருப்பார்.

குண்டக்க மண்டக்க: நடிகர் பார்த்திபன் மற்றும் வடிவேலு கூட்டணியில் காமெடியில் கலக்கிய திரைப்படம் குண்டக்க மண்டக்க. இந்தப் படத்தில் புவனேஸ்வரி ஒரே காட்சியில் மட்டும் வந்திருந்தாலும் கவர்ச்சியில் ஸ்கோர் செய்திருப்பார். மேலும் நடிகர் வடிவேலுவுடன் காமெடியிலும் கலக்கி இருப்பார்.

Also Read: விபச்சார வழக்கில் கைதான 4 நடிகைகள்.. இறுதியில் ஆதாரமில்லை என விடுவிக்கப்பட்ட சம்பவம்

Trending News