Heroine Overtakes Nayanthara: கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கடின போராட்டத்திற்கு பின் சினிமாவில் நயன்தாரா இந்த இடத்தை பிடித்துள்ளார். இன்று லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். ஆனால் இரண்டு வருடத்திலேயே நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு புது நடிகை ஒருவரின் மார்க்கெட் பிச்சிக்கிட்டு போகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், பாலிவுட் என ஹீரோயின் கொடி நாலா பக்கமும் உயர பறக்கிறது. ஹீரோயின் நடித்தாலே படம் ஹிட் என்ற ஒரு சென்டிமென்ட் இவர் மீது வைத்துள்ளனர். நடிகையின் கைவசம் 4 பெரிய படங்கள் இருக்கிறது. அதில் இரண்டு ஹிந்தி படங்கள்.
ஜவான் படம் மூலம் ஹிந்தி மார்க்கெட்டை பிடித்தவர் நயன்தாரா. அதன்பின் அவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஹிந்தியில் படங்கள் இல்லை. இப்பொழுது நயன்தாரா இடத்தை பாலிவுட்டில் கைப்பற்றியுள்ளார் கவர்ச்சி குயின் ஒருவர். சமீபத்தில் நடித்த படம் ஒன்றில் முத்த காட்சிகள், பெட்ரூம் காட்சிகள் என மொத்த பாலிவுட் சினிமாவை கிரங்கடித்துள்ளார்.
ஏ ஆர் முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து தமிழில் ஒரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். அடுத்தது சல்மான் கானை வைத்து படம் எடுக்க போகிறார். சிவகார்த்திகேயன் படத்திற்கு ஒரு மாதம் பிரேக் கொடுத்துவிட்டு சல்மான் படம் சூட்டிங் ஜூலை மாதம் ஆரம்பிக்கப் போகிறார்.
சாருக்கை வலையில் வீழ்த்திய கவர்ச்சிப் குயின்
இந்த படத்தின் ஹீரோயினாக ராஸ்மிகா மந்தனா கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில் இவர் நடித்த அனிமல் படம் சக்க போடு போட்டது. அது மட்டும் இன்றி அந்த படத்தில் இவர் காட்டிய கவர்ச்சி தான் பாலிவுட் ஹீரோக்களை கிரங்கடித்துள்ளது. இப்போது சல்மான், ஷாருக்கான் என பெரிய ஹீரோக்கள் ராஷ்மிகாவிற்கு வலைவீசி வருகிறார்கள்.
10 வருடம் நடித்து நயன்தாரா 12 கோடிகள் வரை சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். ஆனால் ரஷ்மிகா மந்தனா நடிக்க வந்த புதிதில் மூன்று கோடிகள் வாங்கிக் கொண்டிருந்தார் ஆனால் இப்பொழுது எட்டு கோடிகள் வரை உயர்த்திவிட்டார். இன்னும் இரண்டு வருடம் போனால் நயன்தாராவை ஓரம் கட்டி விடுவார்.
- தில்லு ஸ்கொயரில் காட்டிய கவர்ச்சி வீணா போகல
- சல்மான் கான் கொடுக்கும் ஓவர் டார்ச்சர்
- ஷாருக்கான் வரை புகழ்பெற காரணமாய் இருந்த அட்லீயின் 4 படங்கள்