சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் வி ஜே மகாலட்சுமி. விஜேவாக தன்னுடைய கெரியரை ஆரம்பித்த இவர் தற்போது ஒரு நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். சன் டிவியில் பல சீரியல்களில் நடித்திருக்கும் இவர் தற்போது வில்லியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் முடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் நடந்த இவர்களுடைய திருமணம் தற்போது மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் வெளிப்படையாகவே தங்கள் அதிர்ச்சியை காட்டி வருகின்றனர்.
Also read:தயாரிப்பாளரை 2ம் திருமணம் செய்த சன் டிவி மகாலட்சுமி.. திருமண புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
மேலும் இவர்கள் குறித்து பல விமர்சனங்களும் எழுந்து வருகிறது. ஆனால் அதை பற்றி எல்லாம் கவலைப்படாத இந்த ஜோடி தற்போது சோசியல் மீடியாவில் ரொமான்ஸ் செய்வது, ஹனிமூன் புகைப்படங்களை வெளியிடுவது என்று பிசியாக இருக்கின்றனர்.
அந்த வகையில் மகாலட்சுமி தற்போது நயன்தாரா ரேஞ்சுக்கு மஞ்சள் தாலியை வெளியே தொங்க விட்டபடி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். மகாபலிபுரம் ரிசார்ட்டில் ஹனிமூனுக்காக சென்றிருக்கும் இந்த ஜோடி சோசியல் மீடியாவில் பயங்கரமாக ரொமான்ஸ் செய்து வருகின்றனர்.
Also read:புளியங்கொம்பை பிடித்த சீரியல் நடிகை மகாலட்சுமி.. முதல் கணவரை பிரிய இதுதான் காரணம்

அதில் மகாலட்சுமி என்னுடைய இதயத்தை திருடிவிட்டாய், அது உங்களிடமே இருக்கட்டும், லவ் யூ புருஷா என்று ரொமான்டிக்காக பதிவிட்டுள்ளார். அதற்கு ரவீந்திரன் வாழ்க்கைக்கு அன்பு தேவை, அன்புக்கு மகாலட்சுமி தேவை, லவ் யூ பொண்டாட்டி என்று கூறியுள்ளார்.
இப்படி அவர்கள் இருவரும் மாறி மாறி ட்வீட் செய்து வருகின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் எப்படியோ சந்தோஷமாக இருந்தால் சரி தான் என்று அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இந்த ஜோடி தற்போது கல்யாண பூரிப்புடன் சோசியல் மீடியா சேனல்களுக்கு பல பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.
Also read:விஜய் டிவி புகழுக்கு இது இரண்டாவது திருமணமா.? ஆதாரத்தோடு அம்பலமான உண்மை