செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 31, 2024

நின்னு விளையாடிய விஜய்.. கோட் 4 வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

Goat Collection : விஜய்யின் லியோ படம் எதிர்பார்த்த அளவு விமர்சன ரீதியாக பாராட்டை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை கொடுத்தது. இதற்கு காரணம் அந்த படத்திற்கு இருந்த ஹைப் தான். ஏனென்றால் லோகேஷ் இதற்கு முன்னதாக விஜய்க்கு மாஸ்டர் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்தார்.

அதோடு லியோ படம் லோகேஷ் இயக்கத்தில் எல்சியூவில் இடம் பெற்றிருந்தது. மேலும் அனிருத்தும் இசையமைத்திருந்தார். ஆனால் கோட் படத்தில் விஜய் என்ற ஒற்றை மனிதனுக்காக இப்போது ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தியேட்டர் எல்லாமே ஹவுஸ்ஃபுல்லாக இருந்துள்ளது. குடும்பமாக சென்று பார்க்கும் படமாக கோட் படத்தை வெங்கட் பிரபு எடுத்திருந்தார். அதன்படி உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடியை தாண்டி இருக்கிறது.

கோட் நான்காவது நாள் கலெக்ஷன்

அதாவது முதல் நாளே உலகம் முழுவதும் கோட் படம் 126 கோடி வசூல் செய்திருந்தது. கடந்த நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தமாக 138 கோடி வசூல் செய்துள்ளது. இதன் காரணம் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வசூல் இரட்டிப்பாகி இருக்கிறது. அதாவது 34.23 கோடி வசூலை நேற்று பெற்றிருக்கிறது.

தெலுங்கில் 1.5 கோடியும், ஹிந்தியில் 2.7 கோடியும் வசூலை ஈட்டி இருக்கிறது. மேலும் கோட் படம் மொத்தமாக 380 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் இப்போதே 300 கோடியை தாண்டி வசூல் செய்து விட்டது. ஆகையால் மிக விரைவில் போட்ட பட்ஜெட்டை ஏஜிஎஸ் நிறுவனம் எடுக்க உள்ளது.

மேலும் வரும் வாரங்கள் வேலை நாட்கள் என்பதால் வசூல் சற்று குறைய வாய்ப்பு இருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றது. விஜய் இந்த படத்தில் அபாரமாக நடித்த நிலையில் இன்னும் ஒரு படத்துடன் அவரது சினிமா கேரியர் முடிவது ஏக்கத்தை தான் ஏற்படுத்த உள்ளது.

வசூல் வேட்டையாடும் விஜய்

Trending News