புதன்கிழமை, ஜனவரி 22, 2025

Vijay: கோட் பட வியாபாரத்துக்கு பின்னால் உள்ள சோக கதைகள்.. எட்டு வகை கூட்டு போய் முதலுக்கே வந்த பங்கம்

கோட் படத்தின் சேட்டிலைட் உரிமையை நெட்பிலிக்ஸ் 110 கோடிக்கு வாங்கியுள்ளது. இதற்குப் பின்னால் ஒரு பெரும் சோகக்கதையே உள்ளது. முதலுக்கே வேட்டு வந்துரும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டதால் இப்படி ஒரு வியாபாரத்தை பண்ணி இருக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்..

லியோ படத்தின் சாட்டிலைட் உரிமைகள்125 கோடிகளுக்கு வியாபாரமானது. அதனால் ஏஜிஎஸ் நிறுவனம் கோட் படத்திற்கு ஆரம்ப விலையாக 150 கோடிகளை நிர்ணயித்தது. ஆரம்பத்தில் இதற்கு கடும் போட்டி இருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் வியாபாரம் கடும் சூடு பிடித்தது.

எட்டு வகை கூட்டு போய் முதலுக்கே வந்த பங்கம்

அமேசான் நிறுவனம் கோட் படத்திற்கு பேரம் பேசி 140 கோடிகள் வரை நிர்ணயித்துள்ளது. ஆனால் எங்களுக்கு 150 கோடி தான் வேணும் என்று ஒரே பிடியாய் ஏஜிஎஸ் நிறுவனம் இருந்துள்ளனர். அதன் பின் அமேசான் அந்த வியாபாரத்தில் இருந்து பின்வாங்கியது.

கடைசியில் கோட் படத்தை வாங்குவதற்கு எந்த ஒரு நிறுவனமும் தயாராக இல்லை. இறுதியாக வந்த வரைக்கும் லாபம் என நெட்லிக்ஸ் அந்த படத்தை 110 கோடிகளுக்கு வாங்கி இருக்கின்றனர். இப்படி ஒரு சோகக் கதையை சந்தித்துள்ளது கோட் படத்தின் வியாபாரம்.

ஏஜிஎஸ்க்கு இந்த ஆசையை தூண்டியது வெங்கட் பிரபு தான். படம் நிச்சயமாக நல்ல வசூலை தரும், அதனால் ஓடிடி வியாபாரத்திற்கு பெருந்தொகையை பார்த்துவிடலாம் என கூறியுள்ளார். கடைசியில் கல்யாண பந்தியில் இருக்கும் எட்டு வகை கூட்டுக்கு ஆசைப்பட்டு முதலுக்கே வந்த பங்கம் போல் ஆகியுள்ளது.

Trending News