GOAT பட நடிகர்களின் சேலரி மற்றும் பட்ஜெட்.. பிரசாந்த் மோகன் செகண்ட்  இன்னிங்சில் வாங்கிய பெத்த காசு!

GOAT Movie Cast Salary and Budget: தமிழ் திரையுலகின் ஹாட் ஆப் தி டாபிக் என்றால் அது விஜய் மற்றும் வெங்கட் பிரபு இணைந்துள்ள கோட்  திரைப்படமே ஆகும்.

ஏ ஜி எஸ் தயாரிப்பில் முதன்முறையாக கூட்டணி போட்டுள்ள விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கோட்  படத்தின் கதை, காட்சி அமைப்பு, படப்பிடிப்பு முதலான தகவல்கள்  தான் கோலிவுட் வட்டாரத்தில் தீயாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

பிரம்மாண்ட பட்ஜெட், வலுவான கூட்டணி, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு என மும்மடங்கு பலத்துடன் கெத்தாக இறங்க உள்ளது விஜய்யின் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” சுருக்கமாக கோட். 

டைம் டிராவல் சயின்ஸ் பிக்சன் படமான இதில் தளபதி இருவிதமான வேடங்களில் தோன்ற உள்ளார். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், வைபவ், சினேகா, லைலா, பிரேம்ஜி, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரப் பட்டாளத்துடன் தெறிக்க விட வருகிறது வெங்கட் பிரபுவின் இந்த கோட்.

விஜய் கடந்தாண்டு வெளியான லியோ திரைப்படத்திற்கு 150 கோடி சம்பளமாக பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கோட் மற்றும் தனது அடுத்த படமான  விஜய் 69 படத்திற்கு பின்  திரைத்துறையில் இருந்து ஒதுங்கி அரசியலில் ஈடுபட போவதால், தனது மார்க்கெட்டை அதிரடியாக உயர்த்தி  இருந்தார் விஜய்.

கோட் பட நடிகர்களின் சம்பள விவரம்

மொத்தமாக 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இத்திரைப்படத்தில் விஜய்யின் சம்பளம் மட்டுமே 210 கோடியாகும். 

மாநாடு திரைப்படத்திற்குப் பின் ஒரு சில சறுக்கல்களை சந்தித்த இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஜாக்பாட் அடித்தது போல் விஜய்யின் கோட் திரை படத்தின் வாய்ப்பு கிட்டியது இதில் வெங்கட் பிரபுவிற்கு சம்பளம் 18  கோடி ஆக நிர்ணயம்  செய்யப்பட்டது.

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் பெண் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட மோகன் மற்றும் பிரசாந்த் இருவரும் நீண்ட இடைவெளிக்குப்பின் இத்திரைப்படத்தில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர்.

இதில் பிரசாந்திற்க்கு நாலு கோடி எனவும், மோகனின் சம்பளம் ஒரு கோடி எனவும் கூறப்படுகிறது. இயக்குனர், நடன அமைப்பாளர், நடிகர் என ஜொலித்து வரும் பிரபுதேவாவின் சம்பளம் நாலு கோடி என அறியப்படுகிறது.

இவை தவிர கோட் படத்தின் நாயகி மீனாட்சி சவுத்ரி அவர்களின் சம்பளம் 2 கோடி ஆகும். இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ள கோட் திரைப்படம், ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் வரும் செப்டம்பர் மாதம்  திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. 

சமீபத்தில் இதன் டிஜிட்டல் உரிமை மட்டும் 150 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. 

மேலும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியா அல்லது சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடத்த திட்டமிட்டு வருகிறது படக்குழு. இது பற்றிய அப்டேட்டும் கூடிய விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் கோட் படம் பற்றிய தகவல்கள்

Next Story

- Advertisement -