வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கோட் படத்தில் இப்படி ஒரு செம ஜோடியா.? வைரலாகும் புகைப்படம்

Vijay – GOAT : வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் கோட் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சமீபத்தில் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்த நிலையில், அவர் தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரோ என்ற பதட்டம் ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்து வருகிறார். இது தவிர பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வரும் நிலையில் கோட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

அதாவது வசீகரா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சினேகா பல வருடங்களுக்கு பிறகு கோட் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இந்நிலையில் இவர் மைக் மோகன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. கோட் படத்தில் இப்படி ஒரு செம ஜோடியா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : தளபதியை இயக்கும் 5 கைகள்.. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் விஜய்

ஒரு காலத்தில் வெள்ளி விழா நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த மோகன் சில காரணங்களால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் பல வருடங்கள் கழித்து ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்போது விஜய்யின் கோட் படத்திலும் மோகனுக்கு முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் சினேகா மற்றும் மோகன் இருவரும் கோட் படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்து இருவரும் ஜோடியாக நடிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் படத்தை பற்றி நிறைய அப்டேடுகள் விரைவில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

கோட் படப்பிடிப்பில் சினேகா மற்றும் மோகன்

mohan-sneha
mohan-sneha

Also Read : விஜய்யின் அரசியல் வருகையால் தூக்கத்தை தொலைத்த 6 பெரிய புள்ளிகள்.. GOAT-க்கோ தண்ணி காட்டப் போகும் தளபதி

Trending News