வாயை பிளக்க வைத்த GOAT டிஜிட்டல், தியேட்டர் உரிமை விற்பனை.. போட்ட காசை ப்ரீ சேலில் எடுக்கும் AGS

GOAT pre sales: விஜய் தான் சினிமாவை விட்டு போக வேண்டும் என்று நினைக்கிறாரே தவிர, சினிமா எப்போதுமே அவரை கொண்டாட காத்திருக்கிறது. அதற்கு தற்போது GOAT படம் பெரிய உதாரணமாகிவிட்டது. ஒரு வேலை இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு விஜய் தன்னுடைய முடிவை கூட மாற்றிக்கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது.

அந்த அளவுக்கு இந்த படத்தின் பிரீ சேல் பிசினஸ் நடந்து இருக்கிறது. GOAT படம் விஜய் இதுவரைக்கும் தேர்ந்தெடுக்காத சயின்ஸ் பிக்சன் கதை என்பது எல்லோருக்கும் தெரியும். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு விஜய் சினேகாவுடன் கெமிஸ்ட்ரி ஏற்படுத்தி இருப்பது படத்தின் பெரிய பாசிட்டிவாக இப்போது அமைந்திருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என பழைய ஹீரோக்கள் எல்லோரையும் ஒன்று கூட்டி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டார்கள். இதனாலேயே GOAT படத்தின் பிசினஸ் எகிறி விட்டது.

போட்ட காசை ப்ரீ சேலில் எடுக்கும் AGS

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள வர்ஷனின் GOAT பட டிஜிட்டல் உரிமை 125 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாக டைம்ஸ் என்டர்டெயின்மெண்ட் அறிவித்திருந்தது. அது மட்டும் இல்லாமல் ஹிந்தி வெர்ஷன் மட்டும் 25 கோடி ரூபாய்க்கு விற்பனையாக இருக்கிறது.

மொத்தமாக GOAT படத்தின் டிஜிட்டல் உரிமை 150 கோடியாகும். தற்போது பெயர் மற்றும் ஒரு அப்டேட்டை வலைப்பேச்சு சேனல் கொடுத்திருக்கிறது. பிரபல யூடியூபர் பிஸ்மி GOAT படத்தின் தெலுங்கு தியேட்டர் உரிமையை மைத்ரி மூவிஸ் 15 கோடிக்கு வாங்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

மேலும் தமிழ்நாட்டின் திரையரங்கு உரிமையை ரோகிணி பிக்சர்ஸ் 88 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறதாம். படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 300 கோடியாகும். டிஜிட்டல் விற்பனை, தியேட்டர் விற்பனை என இப்போதே படம் 250 கோடிக்கு மேல் லாபம் பார்த்து விட்டது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →