ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கோட் புதிய சாதனை.. நெற்றி வேர்வையை துடைக்கும் சூப்பர்ஸ்டார்

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது.

பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தொடர்ச்சியாக வசூல் வேட்டை நிகழ்த்தி வந்த இந்த படம் தற்போது வரை ரூ. 455 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதனை தி கோட் படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் உறுதி செய்திருந்தார்.

நெற்றியில் வேர்வையை துடைக்கும் சூப்பர்ஸ்டார்

இந்த நிலையில் OTT-யும் சக்கை போடு போடுகிறது கோட் படம். அதிகம் பார்க்கப்பட்ட படமாக உள்ளது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும், 3 மணி நேரம் போனதே தெரியவில்லை என்று தான் பெரும்பாலானோர் கூறுகின்றனர்.

தற்போது, கோட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் நடிகர் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படமானது, ரூ.100 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு ஷேர் தொகையை ஈட்டி தந்து சாதனைப் படைத்துள்ளது. அனைவருக்குமே ஒரு படம் லாபமாக அமைவது அரிது. கோட் பட தயாரிப்பாளர் கல்பாத்தியுடன் தளபதி விஜய் நேற்று கேக் வெட்டி கொண்டாடினார். அந்த நியூ லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Goat vijay cake cutting

அப்படி கோட் படம் அனைவருக்கு லாபத்தை ஈட்டி கொடுத்துள்ளது. தற்போது, வேட்டையன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வருகிறது. இந்த படம் எல்லாரையும் திருப்தி படுத்தவில்லை. கோட் படம் இப்படி ஒரு சாதனையை படைத்திருக்க, வேட்டையன் போட்ட பணத்தையாவது எடுக்க வேண்டுமே என்ற பயத்தில் இருக்கு. வசூலில் எப்படியாவது, ஜெயிலர் மற்றும் கோட் படத்தை மிஞ்சி வேண்டுமே என்று நெற்றியில் வேர்வையை துடைத்த வண்ணமாய் இருக்கிறார்.

Trending News