புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

500 கோடியை தொடாத கோட்.. ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.?

Goat : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான கோட் படம் செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, சினேகா, பிரசாந்த், மோகன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். திரிஷா ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

மேலும் சிவகார்த்திகேயன், தோனி போன்றோர் கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தனர். ஏஐ டெக்னாலஜி மூலம் கேப்டனையும் இந்த படத்தில் காண்பித்திருந்தனர். இந்நிலையில் படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 நாட்களைக் கடந்து இப்போதும் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

பொதுவாகவே பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸுக்கு முன்பே ஓடிடிக்கு பெருந்தொகைக்கு விற்கப்படுகிறது. தியேட்டரில் படம் வெளியான ஓரிரு மாதங்களில் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். அவ்வாறு ஒரு மாதத்திற்கு உள்ளாகவே கோட் படம் இப்போது ஓடிடிக்கு வருகிறது.

ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம்ங் ஆக உள்ள கோட்

அதாவது நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வருகின்ற அக்டோபர் மூன்றாம் தேதி கோட் படம் ஸ்ட்ரீம்ங் ஆக இருக்கிறது. இவ்வளவு சீக்கிரம் விஜய்யின் படம் ஓடிடிக்கு வந்தது ரசிகர்களுக்கு ஒருபுறம் அதிர்ச்சியாக இருந்தாலும், நெட்பிளிக்ஸில் எப்போதும் இந்த படத்தை பார்க்கலாம் என்ற ஒரு ஆறுதலும் இருக்கிறது.

மேலும் படம் வெளியான 25 நாட்களில் 460 கோடி வசூலை கோட் படம் ஈட்டி இருந்தது. ஆனால் படம் வெளியாவதற்கு முன்பு பிரமோஷன் நிகழ்ச்சியில் தயாரிப்பு நிறுவனம், பிரேம்ஜி, வைபவ் போன்ற பல பிரபலங்கள் கோட் படம் ஆயிரம் கோடி வசூலை அசால்ட்டாக அடிக்கும் என்று கூறியிருந்தனர்.

ஆனால் இப்போது 500 கோடியை கூட கோட் படத்தால் தொட முடியவில்லை. மேலும் ஓடிடி தளத்தில் படம் வெளியானால் தியேட்டரில் இருந்து கோட் படம் தூக்கப்படும். விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படமாவது ஆயிரம் கோடி வசூலை அடிக்கிறதா என்பதை பார்க்கலாம்.

ஓடிடிக்கு வரும் கோட்

Trending News