வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வெங்கட் பிரபுவுக்காக ரஷ்யா போன அர்ச்சனா கல்பாத்தி.. விஜய் போட்ட ஆர்டரால் இறங்கி வேலை செய்யும் தயாரிப்பாளர்

Actor Vijay: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாகவே இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்த படத்தோடு தளபதி சினிமாவுக்கு முழுக்கு போட இருக்கிறார்.

கடைசி படத்தை முடித்த கையோடு தீவிர அரசியல் களத்தில் குதிக்கவும் அவர் முடிவெடுத்துள்ளார். இது குறித்த அறிவிப்பை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த திரையுலகமும் பரபரப்பாகி இருக்கிறது.

விஜய்யின் கடைசி பட இயக்குனர் யார் என்ற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்கிறது. அதேபோல் கோட் படம் எப்போது வெளிவரும் என்ற ஆர்வமும் ஒரு பக்கம் இருக்கிறது. இந்நிலையில் விஜய் கோட் பட டீமுக்கு ஒரு உத்தரவை போட்டிருக்கிறார்.

Also read: திரிவிக்ரமுக்கு முன் விஜய் கூப்பிட்ட இயக்குனர்.. இரண்டு படங்கள் முக்கியம்னு தூக்கி எறிந்த டைரக்டர்

அதாவது மார்ச் இறுதிக்குள் முடித்து விட வேண்டும் என அவர் கண்டிஷனாக சொல்லிவிட்டாராம். அதனால் தற்போது வெங்கட் பிரபு நிற்க நேரமில்லாமல் பிஸியாக வேலை பார்த்து வருகிறார். அதேபோல் தயாரிப்பாளரும் தன் பங்குக்கு இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து விட்டாராம்.

அதன்படி அர்ச்சனா கல்பாத்தி தற்போது வெளிநாட்டை முற்றுகையிட்டுள்ளார். ரஷ்யா, அஜர்பைஜான் என ஒவ்வொரு இடமாக சென்று லொகேஷன் பார்த்து வருகிறாராம். இப்படி அனைத்து வேலைகளும் அரக்க பறக்க நடந்து வரும் நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: 5 விஜய் பட வில்லன்களின் அழகிய மனைவிகள்.. 50 வயதில் முத்துப்பாண்டி செய்த கல்யாணம்

Trending News