வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Vijay: கோட் VFX வேலை முடிஞ்சது, வெங்கட் பிரபு ட்விட்.. ட்ரெண்டாகும் தளபதியின் வைரல் புகைப்படம்

Vijay: வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகிறது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம். இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் எக்கச்சக்க பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் தளத்தில் கோட் படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்திருக்கிறார். அதாவது இந்த படத்தின் விஎப்எக்ஸ் காட்சிக்கு உண்டான புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். சமீப காலமாக வெளியாகும் படங்களில் விஎப்எக்ஸ் வேலைகள் அதிகம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அதுவும் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தில் விஎப்எக்ஸ் காட்சிகள் தெறிக்கவிட்டுள்ளனர். இந்நிலையில் கோட் படத்திலும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய்யின் புகைப்படத்தை வெங்கட் பிரபு வெளியிட்டிருக்கிறார்.

மாஸ் காட்டும் தளபதி

மேலும் செப்டம்பர் 5ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. அதற்குள் விஎஃப்எக்ஸ் வேலைகளை வெற்றிகரமாக படக்குழு முடித்துள்ளது. அவதார், அவெஞ்சர்ஸ் போன்ற படங்களில் பணியாற்றிய விஎஃப்எக்ஸ் குழுவினர் தான் கோட் படத்திலும் பணிபுரிந்துள்ளனர்.

goat
goat

அதோடு விஜய் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் நிலையில் இளமையாக தெரிய டிஏஜிங் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோட் படத்தில் சில காட்சிகளில் விஜயகாந்தின் உருவமும் கொண்டுவர உள்ளதால் ஏஐ டெக்னாலஜி கொண்டு பயன்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு நாம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் கோட் படத்தில் நிறைந்துள்ளதால் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும் இப்போது வெளியாகியிருக்கும் கோட் வி எஃப் எக்ஸ் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

Trending News