வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

கங்குவாவுக்கு முன்பே ரேஸிலிருந்து விலகிய கோட்.. உண்மையை போட்டு உடைத்த வெங்கட் பிரபு

Suriya : சூர்யா ரசிகர்களே கங்குவா தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த படம் எப்போது ரிலீஸாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

ஏனென்றால் ஆயுத பூஜை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக படத்தை வெளியிட்டால் நல்ல வசூலை பெறலாம் என்று முடிவெடுத்திருந்தனர். ஆனால் அக்டோபர் மாதம் ஞானவேல் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகி இருக்கும் வேட்டையன் படம் வெளியாக இருக்கிறது.

ஏற்கனவே ரஜினி படத்துடன் தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்ய மாட்டேன் என்று சிறுத்தை சிவா கூறியிருந்தார். அதன்படி கங்குவா ரிலீஸ் இப்போது தள்ளி போயிருக்கிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த அப்சட்டில் உள்ளனர்.

கங்குவாக்கு முன்பே விலகிய கோட்

கங்குவா படத்திற்கு முன்பே ரேஸிலிருந்து விலகி இருக்கிறது கோட் என்பதை வெங்கட் பிரபு தனது பேட்டி ஒன்றில் மூலம் கூறியிருக்கிறார். அதாவது கோட் படத்தை ஆயுத பூஜை விடுமுறையில் வெளியிடலாம் என்பது தான் வெங்கட் பிரபுவின் ஆசையாம்.

அக்டோபர் வெளியிட்டால் படத்திற்கான வேலையையும் கொஞ்சம் பொறுமையாக பார்க்கலாம் என்று தான் இருந்தார்கள். ஆனால் தயாரிப்பது நிறுவனத்திற்கு இருந்த நெருக்கடி காரணமாக செப்டம்பர் 5 கோட் படத்தை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டதாக வெங்கட் பிரபு கூறியிருக்கிறார்.

இந்த பேட்டிக்கு பிறகு வெங்கட் பிரபுவை ட்ரோல் செய்து ரஜினி ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதாவது வேட்டையன் படத்தை பார்த்து கங்குவா படம் இப்போது பின்வாங்கிய நிலையில் முதலே ரேசிலிருந்து கோட் படம் விலகியதாக கிண்டல் அடித்துள்ளனர்.

சூடுபிடிக்கும் கோட் ப்ரோமோஷன்

Trending News