Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி வீட்டுக்குள் உட்கார்ந்து கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து சகிக்க முடியாத பாக்கியா, இதற்கு இப்பவே முடிவு கட்ட வேண்டும் என்று கோபியிடம் நீங்கள் இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்று சொன்னேன். ஆனால் நீங்கள் அதை கொஞ்சம் கூட யோசிக்காமல் இப்படி இருந்தால் நானே உங்களை வெளியே அனுப்ப வேண்டியதாக வரும்.
அதனால் நீங்களே உங்க வீட்டுக்கு போவது நல்லது என்று அனைவரும் முன்னாடியும் கோபமாக பேசிவிட்டு வெளியே போய்விட்டார். உடனே கோபி, பாக்கியா சொல்வது சரிதான் நான் இந்த வீட்டில் இருக்க முடியாது, கிளம்புகிறேன் என்று சொல்லி கிளம்பும் பொழுது திடீரென்று நெஞ்சுவலி வந்துவிட்டது என உட்கார்ந்து விட்டார். அப்போது செழியன் டாக்டரை கூட்டிட்டு வரும்போது கோபிக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் டென்ஷன் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
இதனால் பயந்து போன ஈஸ்வரி, கோபி நீ இங்கேயே இரு நான் பாக்கியாவிடம் பேசி சமாளித்து விடுகிறேன் என்று தூங்க சொல்லிவிட்டார். பிறகு வீட்டிற்கு வந்த பாக்யாவிடம் கோபி இங்கே இருக்கட்டும். எனக்கு இருப்பது ஒரே மகன்தான், அவனையும் நான் இழக்க தயாராக இல்லை. நான் உன்னிடம் மடிப்பிச்சை கேட்கிறேன். தயவு செய்து என் பிள்ளையை என்னிடம் இருந்து பிரித்து விடாதே என்று செண்டிமெண்டாக பேசி பாக்யாவின் வாயை அடைத்து விடுகிறார்.
இதனால் எதுவும் பேச முடியாமல் போன பாக்யாவிடம் மறுபடியும் ஈஸ்வரி வைத்த வேண்டுகோள் என்னவென்றால் என் பிள்ளைக்கு தற்போது மன நிம்மதி தேவை. அதனால் அவன் உடம்பு இருக்கும் கண்டிஷனுக்கு மறுபடியும் கோர்ட்டு கேஸ் என்று அலைய முடியாது. அதனால் நீ கோபி மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க வேண்டும் என்று பாக்கியாவிடம் கேட்கிறார். அதற்கு பாக்கியா உங்க பிள்ளை செஞ்ச தவறால் அந்த சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு ஏதாவது ஆயிருந்தால் யார் பொறுப்பாக இருக்க முடியும்.
அப்பொழுது உங்களால் இப்படி ஒரு வார்த்தையை பேச முடியுமா என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி அப்படிலாம் எதுவும் ஆகவில்லையா? இப்பொழுது கோபி முற்றிலும் திருந்திவிட்டான். உன் பிள்ளைகள் தப்பு பண்ணும் பொழுது அவர்களை திருத்தி உன்னுடையனே வச்சிருக்க, அதே மாதிரி தானே எனக்கும் இருக்கும் என்று சொல்லி ஈஸ்வரி போய்விட்டார். இதனால் என்ன செய்வது என்று யோசித்த பாக்கியாவிடம் இனியா மற்றும் செழியனும் உன்னுடைய சந்தோசத்திற்காக குடும்பத்தில் இருப்பவர்களின் நிம்மதியை தொலைத்து விடாதே.
அப்பா மீது கேஸ் போட்டு அப்படி நீ என்னத்த சாதிக்க போற என்று வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு போய் விட்டார்கள். உடனே ஜெனி, பாக்யாவிடம் யார் என்ன சொன்னாலும் பரவாயில்ல. உங்களுக்கு என்ன தோணுதோ அதன்படி முடிவு எடுங்கள் என்று சொல்லி போய் விடுகிறார். இதனால் பாக்கியா என்ன செய்யப் போகிறார், என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
அடுத்ததாக ஈஸ்வரி, கோபி இடம் நீ இங்கே இருப்பதற்கு பாக்கியவுடன் நான் பேசி முடிவு பண்ணிட்டேன். அதனால் யார் என்ன சொன்னாலும் நீங்க இருந்து போக வேண்டாம். ராதிகா உன் வாழ்க்கையில் வந்த பிறகு தான் இவ்வளவு தேவையில்லாத விஷயங்கள் பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறாய் என்று ராதிகாவை பற்றி தவறாக சொல்கிறார்.
உடனே கோபி, ராதிகா மீதும் தப்பில்லை பாக்கியா மீதும் தப்பில்லை நான்தான் மிகப்பெரிய தவறு பண்ணிட்டேன் என்று சொல்லி ரெண்டு பொண்டாட்டிகளையும் விட்டுக் கொடுக்காமல் கூழுக்கும் ஆசை அதே நேரத்தில் மீசையிலும் ஒட்டக்கூடாது என்ற அர்த்தத்தில் கோபி நினைக்கிறார். இது எந்த அளவிற்கு சாத்தியமாக இருக்கப்போகிறது, பாக்கியா என்ன பண்ணப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.