புதன்கிழமை, ஜனவரி 15, 2025

போட்டோவை மறைக்க படாதபாடு படும் கோபி.. போட்டுக்கொடுத்த செல்வி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடர்கள் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது ராமமூர்த்தியின் பிறந்தநாளுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் வீடு முழுவதும் அலங்காரம் செய்துள்ளது.

இதனால் கோபி வீட்டில் உள்ள போட்டோக்களை பார்த்தால் ராதிகாவுக்கு உண்மை தெரிந்துவிடும் என ஒரு ப்ளான் போடுகிறார். அதாவது வீட்டில் அலங்காரம் பத்தவில்லை என்றும் நான் வெளியில் இருந்த அலங்காரம் செய்ய ஆள் கொண்டுவருகிறேன் என கூறுகிறார்.

உடனே மூர்த்தி, கதிர் அனைவருக்கும் குழப்பம் வருகிறது. நேற்று வரைக்கும் இந்த பர்த்டே ஃபங்சன் நடக்க கூடாதுன்னு நினைச்சுட்டு இருந்த கோபி, இன்னைக்கு என்னன்னா இந்த அலங்காரம் பத்தல என்ன சொல்றாரு என அவர்களுக்குள்ளேயே பேசி வருகின்றனர்.

பின்பு அலங்காரம் செய்ய வந்தவர்களிடம் கோபி எல்லா போட்டோவும் மறையுரை மாதிரி அலங்காரம் பண்ணுங்க என கூறுகிறார். அதேபோல் அவர்களும் செய்துவிடுகிறார்கள். ஆனால் அதை பார்த்த மூர்த்தி என்னையா பண்ணி வச்சிருக்க, இதை மட்டும் கோபி மச்சான் பாத்தா அவ்வளவுதான் எனத் திட்டுகிறார்.

என்ன செய்வதென்ற முழிக்கும் கோபி, மூர்த்தி சென்றபிறகு எல்லா போட்டோவையும் மறைத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு செல்கிறார். ஒரு பக்கம் தனம், ஜீவா, பாக்கியா எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது செல்வி வந்து சார் மட்டும் எப்படி இருக்காங்க என கோபமாக பேசுகிறாள்.

ஆனால் ஏதோ ஒன்று சொல்லி பாக்யா செல்வியின் வாயை அடைத்து விடுகிறார். ஆனால் பாக்கியா போனபிறகு செல்வி, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திடம் சார் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார். எழிலுக்கும் இதில் ஏதோ விஷயம் தெரிந்து இருக்கும் அதனால் தான் சார் கூட பேசாமல் இருக்கிறார் என கூறுகிறாள். இந்நிலையில் ராதிகா வருவதற்குள் இந்த இடத்தைவிட்டு எப்படியாவது போக வேண்டும் என திட்டம் தீட்டுகிறார் கோபி.

Trending News