சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

இனியாவை வைத்து ஆட்டத்தை ஆரம்பித்த கோபி அங்கிள்.. ஈஸ்வரி எடுத்த முடிவால் அல்லல்பட போகும் பாக்கியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா வீட்டில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தாத்தாவை நினைத்து அழுது புலம்பி விட்டார்கள். இந்நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த வேலையை ஆரம்பிக்கலாம் என்று ஒவ்வொருவரும் சில வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள். அதில் இனியா காலேஜ் போவதற்கு தயாராகிய நிலையில் காலேஜுக்கு போகும் போது தாத்தாவை நினைத்து ரொம்பவே ஃபீல் பண்ணுகிறார்.

அப்பொழுது ஈஸ்வரி, இனியாவிற்கு ஆறுதல் சொல்லி எழிலை கல்லூரியில் விட்டுட்டு வர சொல்கிறார். அப்பொழுது இனியா ரொம்பவே சோகமாக இருந்ததால் வெளியே நின்னு எழில், படிப்பில் கவனம் செலுத்தி நல்லா படி என்று அட்வைஸ் பண்ணி வருகிறார். அந்த நேரத்தில் அங்கே வந்த கோபி, இனியா தாத்தாவை நினைத்து பீல் பண்ணுவதை பார்த்துவிட்டு நானே என் மகளை கல்லூரியில் போய் டிராப் பண்ணுகிறேன் என்று சொல்லி இனியாவை கூட்டிட்டு போகிறார்.

இனியா மனதை மாற்றி பாக்யாவுக்கு எதிராக திருப்ப நினைக்கும் கோபி

அப்படி கூட்டிட்டு போகும் பொழுது கோபி பட்ட கஷ்டத்தையும் அவமானத்தையும் சொல்லி இனியா, பாக்யா மீது கோபப்படும் அளவிற்கு சில தவறான கருத்துக்களை கூறுகிறார். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இனியவிடம் பாக்யாவை பற்றி தவறாக பேசி பாக்கியாவிற்கு எதிராக இனியாவை வைத்து ஆட்டத்தை ஆரம்பிக்கலாம் என்று கோபி முடிவு பண்ணி விட்டார்.

ஏனென்றால் அந்த வீட்டில் இனியா மட்டும் தான் கோபி என்ன சொன்னாலும் நம்புவார். அத்துடன் சரியாக யோசிக்க முடியாத அளவிற்கு இனியாவின் மனநிலை இருப்பதால் கோபி சொல்வதை நம்பி பாக்கியாவிடம் பிரச்சினை பண்ணுவதற்கும் இனியா தயாராகி விடுவார். இப்படியே ஒவ்வொருவரையும் அந்த குடும்பத்தில் இருந்து தனியாக அனுப்பி வைத்து பாக்கியாவை தனி மரமாக நிற்க வைக்கப் போகிறார்.

ஆனால் தாத்தாவின் இறப்பில் எந்தவித சடங்கும் செய்யக்கூடாது என்று கோபியை அவமானப்படுத்தியது ஈஸ்வரி தான். அதை அம்மாவிடம் நேரடியாக பேசி சரி செய்ய முடியாத கோபி மொத்த கோபத்தையும் பாக்கியா மீது காட்டும் விதமாக இப்படி பழிவாங்கும் உணர்ச்சியுடன் பாக்யவை அல்லல்படுத்த துணிந்து விட்டார். இதையெல்லாம் பாக்யா சமாளித்து கோபியிடமிருந்து குடும்பத்தை காப்பாற்ற போராடுவார்.

இதற்கு இடையில் தாத்தாவின் இறப்பை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து வரும் குடும்பத்திற்கு மறுபடியும் கஷ்டத்தை கொடுக்கும் விதமாக எழில், தாத்தாவுக்கு எண்பதாவது பிறந்தநாளை சீரும் சிறப்புமாக செய்த வீடியோவை போட்டு காட்டி அனைவரையும் மறுபடியும் அழ வைத்து விட்டார். இதை பார்க்கும் போது இந்த தருணத்தில் இந்த வீடியோ போட்டுக் காட்டணுமா என்பதற்கு ஏற்ப கொஞ்சம் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு காட்சிகள் இருந்தது.

இப்பொழுதே இப்படி என்றால் இன்னும் போகப்போக மட்டமான கதைகளை வைத்து அரச்ச மாவையே அரைத்து இன்னும் சில மாதங்கள் ஓட்டலாம் என்று முடிவு பண்ணி இருக்கிறார்கள்.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News