வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அப்பா மகன் உறவே இல்லாமல் கோபியை விட்டுப் போன பந்தம்.. பாக்யா வேலைக்கு ஆப்பு வைத்த எக்ஸ் கணவர்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தாத்தாவின் பிரிவை தாங்க முடியாமல் எழில், செழியன், இனியா அனைவரும் வேதனைப்பட்டு வருகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து அமிர்தா மற்றும் ஜெனி அழுது கொண்டே இருக்கிறார்கள். இவர்களை சமாதானப்படுத்த முடியாமல் பாக்யா, மாமியார் பக்கம் இருந்து அவருடைய வேதனையை துடைத்துக் கொண்டிருக்கிறார்.

பிறகு அங்கு இருந்த செல்வி அக்கா அனைவரையும் சமாதானப்படுத்தி தூங்க வைக்கிறார். இருந்தாலும் தாத்தா பேசிய வார்த்தைகளும், பக்கபலமாக இருந்து சொன்ன விஷயங்களையும் நினைத்து ஒவ்வொருவரும் அழுது புலம்புகிறார்கள். பிறகு தாத்தாவின் பிம்பங்கள் ஆங்காங்கே ஒவ்வொருவருக்கும் தெரிய ஆரம்பிக்கிறது.

திருந்தாத கோபி, பாக்யாவிற்கு கொடுக்கப் போகும் டார்ச்சர்

அடுத்த வேலையை பார்க்க வேண்டும் இதுவும் கடந்து போகணும் என்று சொல்வதற்கு ஏற்ப ஒவ்வொருவரும் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறார்கள். அப்பொழுது அங்கே வந்த ஜெனியின் அம்மா அப்பா தற்போது உங்கள் குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் ஜெனி இங்கே இருந்தால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சரியாக இருக்காது.

அதனால் ஜெனியை எங்களுடன் கூட்டிட்டு போகிறேன் என்று பாக்யாவிடம் கேட்கிறார்கள். அதற்கு பாக்யா மற்றும் செழியன், ஜெனி வயிற்றில் இருக்கும் குழந்தை நினைத்து கூட்டிட்டு போங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். ஆனால் ஜெனி எல்லோரும் இந்த நிலைமையில் இருக்கும் பொழுது என்னால் மட்டும் தனியாக போய் நிம்மதியாக இருக்க முடியாது.

அதனால் நான் இவர்களை விட்டு எங்கேயும் வரவில்லை. நான் இவர்கள் கூட இங்கே இருப்பதால் எனக்கு நிம்மதியாக இருக்கும் என்று போவதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். இதனை தொடர்ந்து தாத்தாவின் அஸ்தியை கரைக்கும் விதமாக செழியன் மற்றும் எழில், பழனிச்சாமி உடன் சென்று அனைத்து காரியங்களையும் செய்து விட்டு அஸ்தியையும் வாங்கிட்டு வருகிறார்.

இதையாவது செய்யலாம் என்று ராதிகாவை கூட்டிட்டு கோபி அங்கே போகிறார். ஆனால் அதற்குள் அவர்கள் செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் செய்து முடிக்கிறார்கள். பிறகு கோபி, எனக்கும் கொஞ்சம் அஸ்தி வேணும் தர முடியுமா என்று அங்கு கேட்டு வாங்கிட்டு வருகிறார். ஆனால் கோபி நிலைமை இந்த அளவுக்கு போயிருக்க தேவையில்லை.

அப்பா மகன் உறவே இல்லாத அளவிற்கு கோபிக்கும் ராமமூர்த்திக்கும் உண்டான பந்தமே முடிந்து போய்விட்டது என்பதற்கு ஏற்ப கடைசியில் எந்த சடங்கு சம்பிரதாயங்களும் செய்ய முடியாமல் மூன்றாவது நபராக வேடிக்கை பார்க்கும் நிலைமை வந்துவிட்டது. இத்தனை கோபத்தையும் மனதில் வைத்திருக்கும் கோபி, இதற்கெல்லாம் காரணம் பாக்கியா தான் என்று வழக்கம்போல் தவறாக புரிந்து கொள்கிறார்.

அத்துடன் பாக்கியா, தனியாக பிசினஸ் பண்ணி அதில் சம்பாதிப்பதால் தான் இவ்வளவு துணிச்சலாக இருக்கிறார். அதனால் முதலில் அந்த ரெஸ்டாரண்ட் பாக்யாவிடம் இருந்து அபகரிக்க வேண்டும் என்று கோபி முடிவு பண்ணுகிறார். அதற்கு ஏற்ற மாதிரி கோபி நண்பரின் ரெஸ்டாரண்ட் தான் பாக்கியா நடத்தும் ஹோட்டல்.

அதனால் எப்படியோ தில்லாலங்கடி வெளியே பார்த்து பாக்கியா வேலை பார்க்கும் ஹோட்டலில் வாங்கி தொடர்ந்து பாக்யாவிற்கு டார்ச்சர் கொடுக்கப் போகிறார். இதுவரை செய்த பாவம் போதாது என்று இன்னும் தொடர்ந்து தப்புக்கு மேல் தப்பு பண்ணும் கோபி எப்போது தான் திருந்தப் போகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News